பொது செய்தி

தமிழ்நாடு

நாமக்கல்லில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

Added : நவ 17, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த வார வானிலையை பொறுத்தமட்டில், பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே, 89.6 டிகிரி மற்றும், 68.9 டிகிரியாக நிலவியது. நாமக்கல் மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக மழை பதிவாகியுள்ளது. அடுத்த மூன்று நாட்கள் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடியுடன் கூடிய கன மழை மாவட்டத்தின்

நாமக்கல்: நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த வார வானிலையை பொறுத்தமட்டில், பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே, 89.6 டிகிரி மற்றும், 68.9 டிகிரியாக நிலவியது. நாமக்கல் மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக மழை பதிவாகியுள்ளது. அடுத்த மூன்று நாட்கள் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடியுடன் கூடிய கன மழை மாவட்டத்தின் பல இடங்களில் எதிர்பார்க்கப்படுகிறது. பகல் வெப்பம், 87.8 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம், 71.6 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் வடக்கு திசையில் இருந்து மணிக்கு, 4 கி.மீ., வேகத்தில் வீசும்.


சிறப்பு ஆலோசனை: கோழிகளுக்கு கிளாஸ்டிரிடியம் தீநுண்மி மூலம் குடற்புண் ஏற்படுகிறது. இவ்வகை தீநுண்மி கோழி கொட்டகையில் எச்சம், தீவனம், ஆழ்கூளம் மற்றும் தூசிகள் உள்ள இடங்களில் பரவியுள்ளது. இவை தவிர கோழிகளின் குடலிலும் கிருமிகள் காணப்படுகிறது. திடீரென தீவனத்தில் ஏற்படும் மாற்றம் அல்லது குடலில் எற்படும் சேதாரத்தால் கோழிகளுக்கு குடற்புண் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். தற்போது நிலவும் தொடர் மழை காலத்தில் மற்றும் எதிர்வரும் குளிர்காலத்தில் ரத்தக்கழிச்சல், குடற்புண் நோய்கள் குறைந்த இடத்தில் அதிக கோழிகளை வளர்க்கு போது உண்டாக வாய்ப்புள்ளது. எனவே, கருவாடு, மீன், கோதுமை போன்ற தீவன பொருள்களை கோழிகளுக்கு வழங்குவதை குறைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X