பொது செய்தி

தமிழ்நாடு

மா.திறன் மாணவர்களுக்கு முன் மதிப்பீட்டு முகாம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
மல்லசமுத்திரம்: நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், 1 முதல், 12ம் வகுப்பு வரையிலான அனைத்து மாற்றுத்திறனுடைய மாணவ, மாணவியருக்கு முன் மதிப்பீட்டு முகாம் மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட மாணவ, மாணவியருக்கு நடந்தது. முகாமில், 173 பேர் கலந்து கொண்டனர். தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணம், அறுவை சிகிச்சை, சிறப்பு பயிற்சி உள்ளிட்டவை

மல்லசமுத்திரம்: நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், 1 முதல், 12ம் வகுப்பு வரையிலான அனைத்து மாற்றுத்திறனுடைய மாணவ, மாணவியருக்கு முன் மதிப்பீட்டு முகாம் மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட மாணவ, மாணவியருக்கு நடந்தது. முகாமில், 173 பேர் கலந்து கொண்டனர். தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணம், அறுவை சிகிச்சை, சிறப்பு பயிற்சி உள்ளிட்டவை தேவைப்படுபவர்கள் குறித்து விபரம் எடுக்கப்பட்டது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜ ராஜேஸ்வரி, ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு பயிற்றுனர்கள், இயன்முறை மருத்துவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

* முள்ளுக்குறிச்சி ஜி.டி.ஆர்., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. உதவி திட்ட அலுவலர் குமார் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விமல் பேசினார். தலைமை ஆசிரியர் சிவசாமி, உதவி தொடக்க கல்வி அலுவலர் பிரபுக்குமார், வட்டார வள மைய மேற்பார்வையாளர் செண்பகவடிவு உள்ளிட்டோர் முகாமிற்கான முன்னேற்பாடுகள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X