பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய போட்டிக்கு பி.டி.ஏ., நிதியுதவி

Added : நவ 17, 2021
Share
Advertisement
குமாரபாளையம்: குமாரபாளையத்தில் அரசு பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான யோகா போட்டிக்கு செல்ல பி.டி.ஏ., சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. குமாரபாளையம் நகரில் சில நாட்களுக்கு முன் மாநில யோகா போட்டி நடந்தது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ருத்ரன் முதலிடம், மவுலிதரன், 3ம் இடம் பிடித்தனர். கோவாவில் நடக்கும் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். அவர்கள் நிதியுதவி

குமாரபாளையம்: குமாரபாளையத்தில் அரசு பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான யோகா போட்டிக்கு செல்ல பி.டி.ஏ., சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. குமாரபாளையம் நகரில் சில நாட்களுக்கு முன் மாநில யோகா போட்டி நடந்தது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ருத்ரன் முதலிடம், மவுலிதரன், 3ம் இடம் பிடித்தனர். கோவாவில் நடக்கும் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். அவர்கள் நிதியுதவி இல்லாமல் சிரமப்படுவதாக தகவல் கிடைக்கப்பெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் கோவா செல்ல நிதியுதவி வழங்கும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் ஆடலரசு தலைமை வகித்தார். தி.மு.க., நகர பொறுப்பாளர் செல்வம் மாணவர்களை வாழ்த்தி, பி.டி.ஏ., சார்பில் வழங்கப்படவிருந்த தொகை, 20 ஆயிரம் ரூபாயை மாணவர்களுக்கு வழங்கினார். பி.டி.ஏ., தலைவர் வெங்கடேசன், நிர்வாகிகள் சுப்ரமணியம், அன்பரசு, இளங்கோவன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X