பொது செய்தி

தமிழ்நாடு

'மாணவர்கள் இடைவிடாமல் கல்வி கற்கும் வகையில் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்'

Added : நவ 17, 2021
Share
Advertisement
திருச்செங்கோடு: ''அனைத்து கிராமப்புற மாணவர்களும் இடைவிடாமல் கல்வி கற்கும் வகையில், இத்திட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும்,'' என, இல்லம் தேடிகல்வித் திட்டத்தின் சிறப்பு கண்காணிப்பு அதிகாரி இளம்பகவத் பேசினார்.'இல்லம் தேடிக் கல்வி' கலைக்குழு கலைஞர்களுக்கு, மாநில அளவில் மூன்று நாள் உறைவிடப்பயிற்சி திருச்செங்கோட்டில் துவங்கியது. முதன்மைக்கல்வி அலுவலர்

திருச்செங்கோடு: ''அனைத்து கிராமப்புற மாணவர்களும் இடைவிடாமல் கல்வி கற்கும் வகையில், இத்திட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும்,'' என, இல்லம் தேடிகல்வித் திட்டத்தின் சிறப்பு கண்காணிப்பு அதிகாரி இளம்பகவத் பேசினார்.


'இல்லம் தேடிக் கல்வி' கலைக்குழு கலைஞர்களுக்கு, மாநில அளவில் மூன்று நாள் உறைவிடப்பயிற்சி திருச்செங்கோட்டில் துவங்கியது. முதன்மைக்கல்வி அலுவலர் மகேஸ்வரி வரவேற்றார். மாநில திட்ட இயக்குனர் சுதன் தலைமை வகித்தார். பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் திட்டம் குறித்து விளக்கினர்.

இல்லம் தேடிக்கல்வித் திட்டத்தின் சிறப்பு கண்காணிப்பு அதிகாரி இளம்பகவத் பேசியதாவது: இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தின் மூலம் பேரிடரால் கல்வி தொடர்பை இழந்துள்ள சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில், நாட்டுப்புற கலைப்பயண கலைக்குழுவினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இளம் வயதிலேயே கல்வியின் முக்கியத்துவத்தை மனதில் பதிய வைக்க வேண்டும என்பதற்காக, இசையோடும், நடனத்தோடும் கூடிய விழிப்புணர்வை கிராமிய கலைஞர்கள் மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தை பரிசோதனையாக, 12 மாவட்டங்களில் துவக்கி வைத்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, நாமக்கல் மாவட்டத்தில் துவங்கப்பட்டுள்ளது. அனைத்து கிராமப்புற மாணவர்களும் இடைவிடாமல் கல்வி கற்கும் வகையில் இத்திட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பயிற்சியில், 36 மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு கலைக்குழுவினர் அடங்கிய கலைஞர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X