ஏரிக்கரை சாலையில் மண் அரிப்பால் அபாயம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
எருமப்பட்டி: பழையபாளையம் ஏரி நிறைந்து தண்ணீர் வெளியேறி வரும் நிலையில் சின்ன ஏரியில் தார்ச்சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.நாமக்கல் அருகே பழையபாளையத்தில் உள்ள சின்ன ஏரியும்,பெரிய ஏரியும் நிறைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இந்நிலையில் ஏரிக்கரை பழையபாளையம் கிராமத்தில் இருந்து துவங்கி முத்துக்காப்பட்டி பிரிவு வரை இரண்டு கி.மீ., தூரம் ஏரிக்கரையில் தார்ச்சாலை

எருமப்பட்டி: பழையபாளையம் ஏரி நிறைந்து தண்ணீர் வெளியேறி வரும் நிலையில் சின்ன ஏரியில் தார்ச்சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.


நாமக்கல் அருகே பழையபாளையத்தில் உள்ள சின்ன ஏரியும்,பெரிய ஏரியும் நிறைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இந்நிலையில் ஏரிக்கரை பழையபாளையம் கிராமத்தில் இருந்து துவங்கி முத்துக்காப்பட்டி பிரிவு வரை இரண்டு கி.மீ., தூரம் ஏரிக்கரையில் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் தினமும் ஏராளமான லாரிகள் சென்று வருகின்றன. தற்போது ஏரியில் தண்ணீர் அதிகளவில் உள்ளதால் சின்ன ஏரியில் ஒரு இடத்தில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மண் அரிப்பை தடுக்க வந்த அதிகாரிகள் பெயரளவிற்கு மணல் மூட்டைகளை வைத்து மண்ணை கொட்டி விட்டு சென்றுள்ள நிலையில், நேற்று தெடர்ந்து தண்ணீர் மட்டம் அதிகரித்து வருவதால் இந்த இடத்தில் மண் அரிப்பால் கரை உடையும் அபாயம் உள்ளது. மேலும் சாலை மிகவும் குறுகலாக மாறியுள்ளதாலும் எச்சரிக்கை பலகை இல்லாததாலும் கனரக லாரிகள் இரண்டு திசையிலும் இருந்து வரும் போது இரவு நேரத்தில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X