பொது செய்தி

இந்தியா

உலகை கிறுகிறுக்க வைத்த கிருமி; கொரோனாவுக்கு 2வது பிறந்தநாள்

Updated : நவ 17, 2021 | Added : நவ 17, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் முதன்முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட தினம் இன்று (நவ.,17). கடந்த 2019ல் இதேநாளில் சீனாவில் உள்ள ஒரு நபருக்கு இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.உலகிற்கே புதியதோர் அனுபவத்தை கொடுத்துக்கொண்டிருப்பதில் கொரோனா வைரசுக்கு முக்கிய பங்கு உள்ளது. சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பயங்கர
CoronaVirus, First Case, Two Years, Covid19, Pandemic, சீனா, கொரோனா, வைரஸ், முதல் பாதிப்பு, 2 ஆண்டுகள், நிறைவு

புதுடில்லி: உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் முதன்முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட தினம் இன்று (நவ.,17). கடந்த 2019ல் இதேநாளில் சீனாவில் உள்ள ஒரு நபருக்கு இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

உலகிற்கே புதியதோர் அனுபவத்தை கொடுத்துக்கொண்டிருப்பதில் கொரோனா வைரசுக்கு முக்கிய பங்கு உள்ளது. சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பயங்கர வேகமாக பரவிய கொரோனா வைரசால் உலகமே ஸ்தம்பித்தது. இதுவரை 25.52 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் தொற்றுக்கு 51.32 லட்சம் பேர் உயிரை இழந்துள்ளனர். இந்த கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு, பல தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு ஓரளவு பரவுதல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


latest tamil news


இவ்வளவு கொடூரமான வைரஸ் சீனாவின் ஹூபே மாகாணத்தில் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி முதன்முதலாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. சீனாவில் வெளியான பத்திரிகையில், 55 வயதான நபர் ஒருவருக்கு புதிய வகையிலான கொரோனா வைரஸ் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், அப்போது கூட கொரோனா குறித்து சீன அரசு அதிகாரப்பூர்வமாக எதுவும் வெளியிடவில்லை.


latest tamil news


அதன்பின், 2019ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி, சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் பலருக்கும் நுரையீரலைத் தாக்கும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருப்பதையும், புதிய வகை கொரோனா வைரஸ்தான் அதற்கான காரணம் என்பதையும் அந்நாட்டு அரசு வெளி உலகுக்கு அறிவித்தது. தொடர்ந்து, ஜனவரி 4, 2020 அன்று உலக சுகாதார நிறுவனம் தன் அதிகாரபூர்வ வலைதளத்தில், முதன்முறையாக கொரோனா வைரஸ் காரணமாக வூஹானில் பரவி வரும் நிமோனியா குறித்து பதிவு செய்தது.


latest tamil news


ஜன.,12ல் சீனாவைச் சேர்ந்த மரபணு ஆராய்ச்சியாளர்கள் புதிய கொரோனா வைரசின் மொத்த மரபணுக்கூறையும் வெளி உலகுக்கு அறிவித்தார்கள். அடுத்த இரு நாட்களில், இந்தத் தொற்று மனிதர்களுக்கிடையே பரவும் வாய்ப்பு மிகக் குறைவு என்றே கூறப்பட்டு வந்தது. ஆனால், ஜன.,22ல் அறிவியலாளர்கள் வூஹானில் மேற்கொண்ட ஆய்வுக்கு பிறகு, கொரோனா வைரஸ் மனிதர்களிடையே எளிதில் பரவி நோய் உண்டாக்கக்கூடியது என்று அறிவிக்கப்பட்டது. அதன்பின், என்ன ஆனது என்பது வரலாறு சொல்லும். ஆம், முதல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. ஆனாலும், அதன் தாக்கம் முற்றிலுமாக முடிந்துவிடவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
17-நவ-202115:52:30 IST Report Abuse
Visu Iyer இடுப்பில் வேட்டி, தோளில் துண்டு, அரைக்கை சட்டை என தமிழர் உடையில் (உடையில் மட்டும் தான்) என பிரதமர் பதவி ஏற்றது முதல். ஆண்டு தோறும் சீன சென்ற வந்த பிரதமர் சீன அதிபரை கொறனா பரவலுக்கு முந்திய மாதம் தான் மகாபாலிபுரத்தில் சந்தித்தார் என்பது தமிழர்கள் மனதில் பதிந்து இருக்கிறது.. பேனருக்கு தடை விதித்த நீதி மன்றம் இவர்கள் வருகைக்கு பேனர் வைக்க அனுமதி தந்தது.. இப்படி நிறைய நினைவலைகள் இருக்குத்துங்களே
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
17-நவ-202115:44:51 IST Report Abuse
Visu Iyer சீன அதிபர் மோடி ஜி இந்தியாவில் உள்ள தமிழநாட்டில், மகாபாலிபுரத்தில் சந்தித்த தினம் அக்டோபர் 11 என்று தொடங்கி இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X