பொது செய்தி

இந்தியா

இந்தியா மீண்டும் 4 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி

Updated : நவ 17, 2021 | Added : நவ 17, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
டில்லி: இந்தியாவில் இருந்து மியான்மர், வங்காள தேசம், நேபாளம், ஈரான் நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படுகிறது.இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் இன்று (நவ., 17) காலை 8 மணி
CORONAVACCINE, 4 COUNTRY, SUPPLY INDIA, EXPORT, 4 நாடுகள், கொரோனா தடுப்பூசி, இந்தியா ஏற்றுமதி, துவக்கம்

டில்லி: இந்தியாவில் இருந்து மியான்மர், வங்காள தேசம், நேபாளம், ஈரான் நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் இன்று (நவ., 17) காலை 8 மணி நிலவரப்படி 113.68 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது


latest tamil news


பக்கத்து நாடுகளான பூடான், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசியை ஏற்றுமதி செய்தது. எல்லா நாடுகளுக்கும் தடுப்பூசி கிடைப்பது சமமாக இருக்க வேண்டும் என்ற 'கோவேக்ஸ்' திட்டத்தின் அடிப்படையிலும், நன்கொடையாகவும் கடந்த ஏப்ரல் வரை 3 கோடி தடுப்பூசிகள் அனுப்பப்பட்டன.

இதுதவிர, 26 நாடுகளுக்கு 3 கோடியே 60 லட்சம் தடுப்பூசிகள் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட்டன. கொரோனாவின் 2-வது அலை உச்சத்தில் இருந்ததால் தடுப்பூசி ஏற்றுமதியை மத்திய அரசு நிறுத்தியது. இந்த நிலையில் இந்தியா மீண்டும் தடுப்பூசியை ஏற்றுமதி செய்கிறது.

மியான்மர், வங்கதேசம், நேபாளம், ஈரான் ஆகிய 4 நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசி ஏற்றுமதியை மீண்டும் தொடங்கியுள்ளது. கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பிறகு தடுப்பூசி ஏற்றுமதி தொடங்கியது.

இதேபோல, ‛‛ஆப்பிரிக்க நாடுகளுக்கு முதல் தடுப்பூசி டோஸ் இந்த வாரத்திற்குள் சென்றடையும். இந்தோனேஷியாவுக்கு 5 கோடி தடுப்பூசி டோஸ்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது,'' என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Maheshkumar -  ( Posted via: Dinamalar Android App )
17-நவ-202118:46:28 IST Report Abuse
Maheshkumar Anuppunga, yellorum nalla irukkattum...
Rate this:
Cancel
17-நவ-202118:17:11 IST Report Abuse
 சங்கி ..... ஒன்று சேர்வோம்.... ஒன்றாய் வளர்வோம்
Rate this:
Cancel
S. Bharani - singapore,சிங்கப்பூர்
17-நவ-202117:03:11 IST Report Abuse
S. Bharani இது நம்ம மனிதாபிமானம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X