லக்கிம்பூர் கலவர வழக்கு: விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி நியமனம்

Updated : நவ 17, 2021 | Added : நவ 17, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: ‛‛லக்கிம்பூர் கலவர வழக்கு தொடர்பாக மாநில சிறப்பு விசாரணைக்குழு நடத்தும் விசாரணையை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி ராகேஷ் குமார் கண்காணிப்பார்,'' என, உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.உ.பி., மாநிலத்தில் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் கடந்த மாதம் போராட்டம் நடத்தினர். அப்போது, மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு
Lakhimpur Kheri case, SC, retire,HC judge, Rakesh Kumar Jain ,,SIT probe

புதுடில்லி: ‛‛லக்கிம்பூர் கலவர வழக்கு தொடர்பாக மாநில சிறப்பு விசாரணைக்குழு நடத்தும் விசாரணையை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி ராகேஷ் குமார் கண்காணிப்பார்,'' என, உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உ.பி., மாநிலத்தில் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் கடந்த மாதம் போராட்டம் நடத்தினர். அப்போது, மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு சொந்தமான கார் கூட்டத்தில் புகுந்தது. இதில், நான்கு விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து பயங்கர கலவரம் வெடித்தது. அந்த காரை மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ரா ஓட்டி வந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கை மாநில சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்தி வருகிறது. அலகாபாத் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பிரதீப்குமார் ஸ்ரீவஸ்தவா தலைமையில் ஒரு நபர் விசாரணைக்கும் மாநில அரசு உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணை குறித்து உச்சநீதிமன்றம் சமீபத்தில் அதிருப்தி தெரிவித்திருந்தது.

இந்த விவகாரத்தில் , சிறப்பு விசாரணை குழு நடத்தும் விசாரணையை உச்சநீதிமன்றம் நியமிக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி, தினசரி அடிப்படையில் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதற்கு உத்தர பிரதேச அரசும் ஒப்புதல் தெரிவித்திருந்தது.


latest tamil news



இந்நிலையில், கண்காணிப்பு நீதிபதியாக பஞ்சாப் மற்றும் சண்டிகர் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராகேஷ் குமார் ஜெயின் நியமிக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-நவ-202119:12:44 IST Report Abuse
SUBBU, MADURAI. ஒரு பிரச்சனைய எதுவுமில்லாமல் அமுக்கணுமா?ஒண்ணு அதன் மேல கல்லை போடு,இல்லாட்டி விசாரனை கமிஷனை போடு.
Rate this:
Cancel
rajan - thane,இந்தியா
17-நவ-202118:34:31 IST Report Abuse
rajan நீதி துரைகளின் கையில்
Rate this:
Cancel
17-நவ-202116:01:10 IST Report Abuse
அப்புசாமி ஓய்வு பெற்றவங்க காட்டுல மழை. இப்போ இருக்குற இளைஞர்கள் மட சாம்பிராணிகள். கடந்த எட்டு வருஷ ப்ராடக்டுகள். தத்திகள்.காங்கிரஸ்கால ஐ.ஏ.எஸ் கேடர் ஆளுங்கன்னா சும்மாவா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X