அவதூறு வழக்கு: தள்ளுபடி செய்யக்கோரி ராகுல் மனு

Updated : நவ 17, 2021 | Added : நவ 17, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
மும்பை: பிரதமர் மோடியை விமர்சனம் செய்தது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி, மும்பை உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் மனு தாக்கல் செய்துள்ளார்.பிரான்சிடமிருந்து 'ரபேல்' போர் விமானம் வாங்குவதில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். இது தொடர்பாக அவர் கூறும் போது, பிரதமர்
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

மும்பை: பிரதமர் மோடியை விமர்சனம் செய்தது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி, மும்பை உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் மனு தாக்கல் செய்துள்ளார்.

பிரான்சிடமிருந்து 'ரபேல்' போர் விமானம் வாங்குவதில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். இது தொடர்பாக அவர் கூறும் போது, பிரதமர் நரேந்திர மோடியை' திருடர்களின் தலைவன்' என குறிப்பிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிதது ராகுல் மீது மகேஷ் ஸ்ரீஸ்ரீமால் என்பவர் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில், ராகுலின் கருத்து பிரதமரின் ஆதரவாளர்களின் உணர்வுகளை காயப்படுத்தியது. அவரின் கருத்து பிரதமரை மட்டுமல்ல, பா.ஜ., தொண்டர்கள் மீதும் அவதூறு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பல முறை ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தலும் ராகுல் ஆஜராகவில்லை.


latest tamil news



இந்நிலையில், மும்பை நீதிமன்றத்தில், ராகுல் சார்பில் அவரது வழக்கறிஞர் குஷால் மொர் தாக்கல் செய்த மனுவில், அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும். ராகுல், பிரதமரை தான் விமர்சனம் செய்தார். வழக்கு தொடர்ந்தவர், அவரது கட்சியை சேர்ந்தவர் அல்ல எனக்குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை விசாரித்த நீதிபதி எஸ்கே ஷிண்டே, மனுவை நவ.,22க்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18-நவ-202104:24:29 IST Report Abuse
J.V. Iyer மனதில் பட்ட எங்கள் காயம் இன்னும் ஆறவில்லை. ராகுல் வின்சியை உடனே சிறையில் தள்ளவேண்டும்.
Rate this:
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
17-நவ-202123:24:57 IST Report Abuse
DARMHAR மூட ர்களைப்பற்றி சொலவடை ஒன்று உண்டு ஜென்மத்தில் பிறந்தது செருப்பால் அடித்தாலும் போகாது என்று..இது மெத்தவே பொருந்தும்.
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
17-நவ-202120:28:51 IST Report Abuse
Duruvesan மகாராஷ்டிரா ஜட்ஜ், தள்ளுபடி தான், ஆர்யான் போல,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X