பொது செய்தி

தமிழ்நாடு

அத்திவரதர் கோவில் குளம் 2 ஆண்டுக்குப்பின் நிரம்பியது: பக்தர்கள் மகிழ்ச்சி

Updated : நவ 17, 2021 | Added : நவ 17, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
காஞ்சிபுரம்: தொடர்மழை காரணமாக காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் குளம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக நிரம்பியதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை 48 நாட்கள் அத்தி வரதர் வைபவ திருவிழா நடைபெறுவது வழக்கம். கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு கோலாகலமாக நடந்தது. 2019ம் ஆண்டுக்கு பிறகு அத்தி வரதர்
KANJIPURAM, ATHIVARATHAR, KoVIL, POOL,FULL, PEOPLE, ENJOY, காஞ்சிபுரம், அத்திவரதர், கோவில் குளம், நிரம்பியது, பக்தர்கள் மகிழ்ச்சி,

காஞ்சிபுரம்: தொடர்மழை காரணமாக காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் குளம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக நிரம்பியதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


latest tamil news


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை 48 நாட்கள் அத்தி வரதர் வைபவ திருவிழா நடைபெறுவது வழக்கம். கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு கோலாகலமாக நடந்தது. 2019ம் ஆண்டுக்கு பிறகு அத்தி வரதர் வைக்கப்பட்டுள்ள ஆனந்தசரஸ் குளத்தில் தற்போது தண்ணீர் முழுமையாக நிறைந்துள்ளது.

வழக்கமாக, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு தமிழகம் மட்டும் இல்லாமல் குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா என பல்வேறு வெளி மாநில, வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். தற்போது அத்தி வரதர் கோவில் குளம் நிரம்பியதால் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கோவிலுக்கு தங்கள் குடும்பத்துடன் வந்து குளத்தில் நின்று போட்டோ எடுத்து மகிழ்கின்றனர்.

கடந்த 2019ம் ஆண்டு நடந்த அத்தி வரதர் திருவிழாவின் போது ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வந்தியதேவ வல்லவரையன் - பல்லவ நாடு,இந்தியா
17-நவ-202117:51:29 IST Report Abuse
வந்தியதேவ வல்லவரையன் ... இக்குளம் நிரம்புனா... குளத்தின் ஓரிரு படிகட்டுக்கள் மட்டுமே தெரியும்... அந்தளவிற்கு தண்ணீர் நிரம்பும்.. ஏனென்றால்... இக்குளத்திற்குள் ஒவ்வொரு மூலைக்கும், நடுவிலும் கிணறு உள்ளது. அதன் கட்டமைப்பு அப்படி? அதுமட்டுமல்லாமல், இந்த வரதராஜ பெருமாள் கோவில் குளம் எனக்கு தெரிந்து (நாற்பத்தைந்து ஆண்டுகளாய்) சென்னை கபாலீஸ்வரர் கோவில் மாதிரி வற்றி... தரை (மண்) தெரிந்ததாக நினைவில்லை... இக்குளத்தை வடித்த நம் முன்னோர்கள் நீரூற்று அமைந்துள்ள இடத்தில்... பல கிணறுகள் தோண்டி அதன் மேலேதான் இக்குளம் அமைந்துள்ளது. அதனால், இக்குளம் வற்றுவது இல்லை... அதைப்போல... நிரம்புதல் என்றால், ஓரிரண்டு படிகள் தெரியும்படி தண்ணீர் குளம் முழுவதும் நிரம்பி தளுப்பும்..
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
17-நவ-202117:20:24 IST Report Abuse
Samathuvan ஒரு பக்கம் வருண பகவானை கொண்டாடுகிறோம் , மறு பக்கம் என்னமோ ஆளும் அரசுதான் இந்த மழை சேதத்துக்கு காரணம்னு சொல்லுறோம். இது இயற்கைன்னு ஏன் நம்ம மர மண்டைல உரைக்கமாட்டேங்குது.
Rate this:
Baskar - sollamudiyatha naadu,இந்தியா
17-நவ-202121:02:48 IST Report Abuse
Baskarநீ பிறந்தது இயற்கையா ? அல்லது உங்க அப்பா , அம்மாவை தெய்வமா நினைக்கிறியா ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X