மக்களின் கூட்டு முயற்சியால் எழுந்து நிற்கிறோம்: நிதியமைச்சர் நிர்மலா| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மக்களின் கூட்டு முயற்சியால் எழுந்து நிற்கிறோம்: நிதியமைச்சர் நிர்மலா

Updated : நவ 17, 2021 | Added : நவ 17, 2021 | கருத்துகள் (19)
Share
புதுடில்லி: கோவிட் பெருந்தொற்று இருந்த போதும் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று. அதற்கு மக்களையே பாராட்ட வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.உலக பொருளாதாரக் கொள்கை மாநாட்டில் மேலும் நிதியமைச்சர் பேசியதாவது: ஒரு நிறுவனமாக இந்தியா அதிக ரிஸ்க் எடுத்து, திறனை வளர்த்து நாடு என்ன எதிர்பார்க்கிறது என்பதைப் புரிந்து
,Nirmala,Nirmala Sitharaman,நிர்மலா,நிர்மலா சீதாராமன், நிதியமைச்சர் நிர்மலா

புதுடில்லி: கோவிட் பெருந்தொற்று இருந்த போதும் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று. அதற்கு மக்களையே பாராட்ட வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

உலக பொருளாதாரக் கொள்கை மாநாட்டில் மேலும் நிதியமைச்சர் பேசியதாவது: ஒரு நிறுவனமாக இந்தியா அதிக ரிஸ்க் எடுத்து, திறனை வளர்த்து நாடு என்ன எதிர்பார்க்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். இந்திய தொழில்துறை முன்னேற்றம் கண்டு, விரிவடைவதை எதிர்பார்க்கிறோம். தொற்றுநோயால் தொழிலாளர் சந்தைகள் அவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளன. திறமையின் மதிப்பு உயர்ந்துள்ளது.

தொழிலாளர்கள் வேறுபட்ட பேரம் பேசும் நிலையில் உள்ளனர். தொழில்கள் இதை அங்கீகரித்துள்ளன. அரசு துறைகள் உள்கட்டமைப்பு செலவினங்களை மேற்கொள்ள வேகமாக நடவடிக்கை எடுக்கின்றன. தொற்றுநோய்க்குப் பிறகு இந்தியாவின் வங்கித் துறையும் குறிப்பிடத்தக்க அளவில் மீண்டுள்ளது.


latest tamil news




இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு ஸ்டார்ட்அப்கள் உள்ளிட்ட புது யுகத் தொழில்களை இணைப்பது மிகவும் முக்கியம். குறைக்கடத்திகள் மற்றும் கன்டெய்னர்கள் பற்றாக்குறை இல்லாமலிருந்திருந்தால் வாகன விற்பனையும் நன்றாக இருந்திருக்கும். என கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X