தொழில்நெறி வழிகாட்டும் கருத்தரங்கம்: தொழில் மையம் சார்பில் கண்காட்சி

Added : நவ 17, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அரசு கலைக்கல்லுாரியில், மாணவர்கள் எதிர்காலத்தில் சுயதொழில் துவங்குவதை ஊக்குவிக்கும் வகையில், தொழில்நெறி வழிகாட்டும் கருத்தரங்கம் நடந்தது.பொள்ளாச்சி அரசு கலைக்கல்லுாரியில், மாவட்ட வேலை வாய்ப்பு மையம் வாயிலாக, தொழில்நெறி வழிகாட்டும் கருத்தரங்கு மற்றம் கண்காட்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் கார்த்திகைவாசன் தலைமை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அரசு கலைக்கல்லுாரியில், மாணவர்கள் எதிர்காலத்தில் சுயதொழில் துவங்குவதை ஊக்குவிக்கும் வகையில், தொழில்நெறி வழிகாட்டும் கருத்தரங்கம் நடந்தது.பொள்ளாச்சி அரசு கலைக்கல்லுாரியில், மாவட்ட வேலை வாய்ப்பு மையம் வாயிலாக, தொழில்நெறி வழிகாட்டும் கருத்தரங்கு மற்றம் கண்காட்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் கார்த்திகைவாசன் தலைமை வகித்தார். மாவட்ட வேலை வாய்ப்பு மைய துணை இயக்குனர் கருணாகரன், மண்டல இணை இயக்குனர் (வேலை வாய்ப்பு) ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்லுாரி முதல்வர் ராஜ்குமார் வரவேற்றார். கல்லுாரி பணியமர்த்தும் அலுவலர் ராஜாராம் ஒருங்கிணைத்தார்.கருத்தரங்கில், தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட தொழில் மையத்தின் வாயிலாக வழங்கப்படும் சுயதொழில் கடன் திட்டங்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் புதிய தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் பற்றி தெரிவிக்கப்பட்டது.மேலும், வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகியவை குறித்தும், இத்திட்டங்களில் பயனடைந்து சுயதொழில் துவங்க தேவையான கல்வித்தகுதி, தொழிற்பயிற்சி, கடன் மானியங்கள் குறித்து மாணவர்களிடையே எடுத்துக் கூறப்பட்டது. தொடர்ந்து, மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. வேலைவாய்ப்பு மையம் மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது.நிகழ்ச்சியில், மாணவர்கள் பங்கேற்று, கல்லுாரி படிப்புக்கு பிறகான சுயதொழில்கள் குறித்த வழிகாட்டல் பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X