பொது செய்தி

தமிழ்நாடு

ரபி பருவ பயிர் சாகுபடிக்கு காப்பீடு திட்டம் அறிவிப்பு

Added : நவ 17, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு: புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், ரபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்ய, கிணத்துக்கடவு வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.கிணத்துக்கடவு பகுதியில் ரபி பருவம் துவங்கியுள்ள நிலையில், பயிர்களுக்கு எதிர்பாராத விதமாக ஏற்படும் இயற்கை இடர்பாடுகள், மகசூல் இழப்புகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள,

கிணத்துக்கடவு: புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், ரபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்ய, கிணத்துக்கடவு வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.கிணத்துக்கடவு பகுதியில் ரபி பருவம் துவங்கியுள்ள நிலையில், பயிர்களுக்கு எதிர்பாராத விதமாக ஏற்படும் இயற்கை இடர்பாடுகள், மகசூல் இழப்புகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள, புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், காப்பீடு செய்து பயனடையலாம். மக்காச்சோளம் மற்றும் கொண்டைக்கடலைக்கு, பயிர் காப்பீடு மேற்கொள்ள, வரும், 30ம் தேதி கடைசி நாளாகும். நிலக்கடலை, சோளப்பயிருக்கு, டிச.,15; கரும்புக்கு அடுத்த ஆண்டு ஆக., 31ம் தேதி வரை காப்பீடு செய்யலாம்.சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு, காப்பீடு மேற்கொள்ள, ஆதார் அட்டை நகல், வி.ஏ.ஓ., வழங்கும் நடப்பு பசலியின் பயிர் சாகுபடி அடங்கல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தின் நகல், மத்திய கூட்டுறவு வங்கியில் கணக்கு வைத்திருந்தால் வங்கி கணக்கு புத்தகம், முன்மொழிவு விண்ணப்பத்துடன் கூடிய பதிவு விண்ணப்பம், பிரீமிய கட்டண தொகை ஆகியன கொண்டு வர வேண்டும்.மக்காச்சோளத்துக்கு பிரீமிய தொகையாக ஏக்கருக்கு - 450 ரூபாய், கொண்டைக்கடலை - 256, நிலக்கடலை - 448, கரும்பு - 2,875, சோளம் - 142 ரூபாய் செலுத்த வேண்டும்.இத்தகவலை, கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X