பொது செய்தி

தமிழ்நாடு

புதரில் மறையும் 'நம்ம டாய்லெட்': வீணாகுது மக்கள் செலுத்திய வரிப்பணம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியில், பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதாக கூறி, பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட 'நம்ம டாய்லெட்' திட்டம், பராமரிப்பின்றி வீணாகியுள்ளது.தமிழகத்தில் அதிக வரி வசூலிக்கும் நகராட்சிகளில் முன்னிலையில் இருப்பது பொள்ளாச்சி நகராட்சி. மக்களிடம் வசூலிக்கப்படும் வரிப்பணத்தை, மேம்பாட்டு திட்டங்கள் என்ற பெயரில் செலவழித்து



பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியில், பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதாக கூறி, பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட 'நம்ம டாய்லெட்' திட்டம், பராமரிப்பின்றி வீணாகியுள்ளது.தமிழகத்தில் அதிக வரி வசூலிக்கும் நகராட்சிகளில் முன்னிலையில் இருப்பது பொள்ளாச்சி நகராட்சி. மக்களிடம் வசூலிக்கப்படும் வரிப்பணத்தை, மேம்பாட்டு திட்டங்கள் என்ற பெயரில் செலவழித்து வருகின்றனர்.அவற்றில் எத்தனை திட்டங்கள் மக்களுக்கு பயன்பட்டன என்பது, இது வரை செயல்படுத்திய பல்வேறு திட்டங்களை திரும்பிப் பார்த்தால் தெரிந்து விடும்.பாலக்காடு ரோடு நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட ஸ்கேட்டிங் மைதானம், சமத்துார் ராமஐயங்கார் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்ட ஸ்கேட்டிங் அரங்கம், மரப்பேட்டை கந்தசாமி பூங்கா என பணத்தை வாரியிறைத்ததாக கணக்கு காட்டிய பெரும்பாலான திட்டங்கள் இன்று மக்கள் பயன்பாட்டிலேயே இல்லை.அவற்றை விட, பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதாக கூறி, கடந்த, 2013ல் அமைக்கப்பட்ட, 'நம்ம டாய்லெட்' மற்றும் 'இ - டாய்லெட்' திட்டங்களுக்கு தலா, 7 லட்சம் ரூபாய் முதல், 15 லட்சம் ரூபாய் வரை செலவு கணக்கு காட்டப்பட்டது.கோட்டூர் ரோடு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே, தெப்பக்குளம் அருகே, மகாலிங்கபுரம் ரவுண்டானாவுக்கு வெளியே என, இந்த நவீன கழிப்பறைகள் அமைக்கப்பட்டன. இந்த கழிப்பறைகள், முறையான பராமரிப்பின்றியும், தரமின்றியும் ஒரு சில ஆண்டுகளிலேயே பயன்பாட்டுக்கு உதவாமல் போயின.தற்போது, சில இடங்களில் இந்த டாய்லெட்டுகளை காணவில்லை; கோட்டூர் ரோட்டில், புதர்கள் சூழ, பாழடைந்து கிடக்கின்றன 'நம்ம டாய்லெட்டுகள்'. இப்படி, மக்களின் வரிப்பணத்தை வீணாக செலவு செய்துள்ளது நகராட்சி நிர்வாகம். இனியாவது அவற்றை பராமரித்து, புதுப்பித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X