துளிகள் செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்...

Added : நவ 17, 2021
Share
Advertisement
பயிர்களைக் காக்கும் 'சேலை வேலி'மடத்துக்குளம் அமராவதி பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதியில், 20 ஆயிரம் ஏக்கருக்கு கூடுதலான விளைநிலங்கள் உள்ளன. இதில் நெல், கரும்பு, வாழை, மக்காச்சோளம், காய்கறி, மற்றும் பயிறு வகை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.இதில், கல்லாபுரம் தொடங்கி கொமரலிங்கம் மற்றும் அதற்கு அருகிலுள்ள சில கி.மீ., தொலைவு வரை உள்ள விளைநிலங்கள், அமராவதி

பயிர்களைக் காக்கும் 'சேலை வேலி'மடத்துக்குளம் அமராவதி பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதியில், 20 ஆயிரம் ஏக்கருக்கு கூடுதலான விளைநிலங்கள் உள்ளன. இதில் நெல், கரும்பு, வாழை, மக்காச்சோளம், காய்கறி, மற்றும் பயிறு வகை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.இதில், கல்லாபுரம் தொடங்கி கொமரலிங்கம் மற்றும் அதற்கு அருகிலுள்ள சில கி.மீ., தொலைவு வரை உள்ள விளைநிலங்கள், அமராவதி வனப்பகுதியின் எல்லை அருகில் உள்ளது.இதனால் எல்லை தாண்டும் காட்டு விலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவது பலநேரம் நடக்கிறது.விவசாயிகள் கூறுகையில், 'தற்போது சம்பா பருவ நெல் சாகுபடியியில் ஈடுபட்டுள்ளோம். இதற்காக நாற்றங்கால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் நாற்றுகளை, காட்டு விலங்குகள் சேதப்படுத்தாமலிருக்க, சேலைகள் மற்றும் துணிகளைக்கொண்டு தற்காலிக தடுப்பு அமைத்துள்ளோம்' என்றனர்.
பள்ளி மாணவர்கள் சாதனைசேலம் மாவட்டம் சோனா பொறியியல் கல்லூரியில், 16ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை மாநில அளவிலான ஓவியப்போட்டி நடக்கிறது.மாவட்ட அளவில் நடந்த போட்டிகளில், முதலிடம் பெற்ற கணியூர் வெங்கட கிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி மாணவர் ஹரி பிரசன்னா, இந்த போட்டியில் பங்கேற்க தேர்ச்சி பெற்றுள்ளார்.இவருக்கு, ஓவிய ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி வழிகாட்டுதலாக உள்ளார். இதோடு சட்டப்பணிகள் ஆணைக்குழு நட த்திய, மாவட்ட அளவிலான கட்டுரைப்போட்டியில் கணியூர் பள்ளி மாணவி ப்ரீத்தா மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.இவர்களுக்கு பள்ளிச்செயலர் ஈஸ்வரசாமி, தலைமையாசிரியர் முரளி, தமிழ் ஆசிரியர் அருண்பிரசாத் மற்றும் இதர ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
ரோட்டோர புதர் அகற்ற உத்தரவுபோக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ரோட்டோர புதர்களை உடனடியாக அகற்ற, ஊராட்சி நிர்வாகத்தினருக்கு, குடிமங்கலம் ஒன்றிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.சமீபத்திய மழைக்கு பிறகு, கிராமப்புற இணைப்பு ரோடுகளில், அதிகரித்துள்ள புதர்களால், போக்குவரத்துக்கு இடையூறு அதிகரித்துள்ளது; ரோட்டோர குழிகளால், விபத்து ஏற்படுகிறது,' என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சார்பில், குடிமங்கலம் ஒன்றிய அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது.இது குறித்து, தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, குடிமங்கலம் ஒன்றிய பி.டி.ஓ., சிவகுருநாதன், ஊராட்சி நிர்வாகத்தினருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'கிராம இணைப்பு ரோடுகளில், இருபுறங்களிலும், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள புதர், செடி, கொடிகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்; இது குறித்து மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்,' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நுாலகத்துக்கு புத்தகங்கள் நன்கொடைஉடுமலை, உழவர் சந்தை எதிரேயுள்ள, கிளை நுாலகம் எண் இரண்டை, அதிகப்படியான வாசகர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இங்கு அதிக அளவிலான புத்தகங்கள் உள்ள நிலையில், பல்வேறு தரப்பினரிடம் இருந்தும், போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள், நன்கொடையாகப் பெறப்பட்டு வருகின்றன. வாசகர்கள் நலன் கருதி இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அவ்வகையில், உடுமலை சதாசிவம் லே அவுட் பகுதியைச்சேர்ந்த சத்தீஸ்வரன் என்பவர் பொறியியல், விவசாயம் மற்றும் வங்கி போட்டித்தேர்வுக்கான புத்தகங்களை, நன்கொடையாக வழங்கினார்.அப்போது, செஸ் பயிற்சியாளர் சதாசிவம், உடனிருந்தார். அவர்களுக்கு, நுாலகர்கள் கணேசன், மகேந்திரன், பிரமோத் மற்றும் வாசக வட்டத்தினர் நன்றி தெரிவித்தனர்.மாணவர்களுக்கு ஹாஸ்டல் வசதியில்லைவால்பாறை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், தற்போது, 880 மாணவர்கள் படிக்கின்றனர். முதலாமாண்டில், 540 மாணவர்களுக்கு, 376 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். கல்லுாரியில் படிக்கும் மாணவிகளுக்கு மட்டும் ஹாஸ்டல் வசதி உள்ளது. ஆனால் மாணவர்களுக்கு ஹாஸ்டல் வசதி இல்லை. இதனால், ஆண்டுதோறும் மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருவதோடு, வெளியூர் மாணவர்கள் தங்குவதற்கு ஹாஸ்டல் இன்றி தவிக்கின்றனர்.குறிப்பாக, சேலம், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் கல்லுாரியில் சேர்ந்து படிக்கின்றனர். இவர்கள், தனியார் கட்டடத்தில் வாடகைக்கு தங்குகின்றனர்.இது குறித்து, கல்லுாரி பேராசிரியர்கள் கூறுகையில், 'வால்பாறை அரசு கல்லுாரியில் வெளிமாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் படிக்கின்றனர். மாணவர்களுக்கான ஹாஸ்டல் கட்டப்படவில்லை. இதனால், வாடகைக்கு வீடு பிடித்து, மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். மாணவர்களின் நலன் கருதி ஹாஸ்டல் கட்டினால், சேர்க்கை அதிகரிக்கும்,' என்றனர்.கைக்கு எட்டும் உயரத்தில் அபாயம்பொள்ளாச்சி நகரில் உள்ள பெரும்பாலான மின்கம்பங்கள், தெருவிளக்கு கம்பங்களில், மின்பெட்டிகள் பாதுகாப்பின்றி திறந்தநிலையில் உள்ளன. அதில், சில கம்பங்களில், சிறுவர்களின் கைகெட்டும் உயரத்தில் மின்பெட்டிகள் அமைத்து, மின் ஒயர்கள், பியூஸ் கட்டைகள், மீட்டர் பாக்ஸ் அனைத்தும் வெளிப்படையாக தெரிகின்றன.தற்போது, பள்ளிகள் திறந்து, மாணவர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், இது போன்ற பாதுகாப்பில்லாத பெட்டிகளால் அசம்பாவிதங்கள் நிகழ அதிக வாய்ப்புள்ளது.மழைக்காலம் என்பதால், இந்த மின்பெட்டிகள், சிறுவர்களுக்கு மட்டுமின்றி, பெரியவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதை உணர்ந்து, நகராட்சி நிர்வாகமும், மின்வாரியமும் மின்பெட்டிகளை பாதுகாப்பனவையாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.விளக்குகள் விற்பனை ஜரூர்கார்த்திகை மாதம் துவங்கியுள்ள நிலையில், திருவண்ணாமலையில் தீபத்திருநாள் நடக்கும்போது, கிராமம், நகர பகுதிகளில், வீடு, கோவில்களில் தீபம் ஏற்றி, வழிபடுவது வழக்கம்.இதற்காக, களிமண்ணால் தயாரிக்கப்பட்ட தீபங்கள் விற்பனைைய, கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்ட் பகுதியில், சிங்கராம்பாளையத்தை சேர்ந்த மண் பாண்ட தொழிலாளர்கள் துவக்கியுள்ளனர்.ஒரு முக தீப விளக்குகள், மூன்று மற்றும் ஐந்து முக விளக்குகள் தீபத்திருநாளுக்காக விற்பனை செய்யப்படுகின்றன. சிறிய விளக்குகள் முதல், ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட விளக்கு, இரண்டு லிட்டர் முதல், 5 லி., எண்ணெய் கொள்ளளவு கொண்ட விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன. இவை, ஒரு ரூபாய் முதல், 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.கால்பந்து போட்டியில் முதலிடம்வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள், உடுமலையில் நடந்த ஜூனியர் கால்பந்து போட்டியில் பங்கேற்றனர். அதில், 19 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கான கால்பந்து போட்டியில், மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த, 25 அணி விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.இறுதி போட்டியில், வால்பாறை அணியும், உடுமலை அணியும் மோதின. இதில், 2 - 0 என்ற கோல் கணக்கில், வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற்றனர். மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ், உடற்கல்வி ஆசிரியர்கள் ராகவன், அசோக் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X