தமிழ்நாடு

தீபாவளிக்கு சென்ற மாணவர்கள் பள்ளி திரும்பாததால் புலம்பல்

Added : நவ 17, 2021
Share
Advertisement
உடுமலை: திருப்பூர் மாவட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஒன்று முதல், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.நோய்த்தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டாலும், வகுப்புகளில், மாணவர் எண்ணிக்கையைப் பொறுத்து, சுழற்சிமுறையில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இதனால், பள்ளிகளில், தினமும், நுாறு சதவீத மாணவர்களின் வருகை, உறுதி

உடுமலை: திருப்பூர் மாவட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஒன்று முதல், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.நோய்த்தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டாலும், வகுப்புகளில், மாணவர் எண்ணிக்கையைப் பொறுத்து, சுழற்சிமுறையில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இதனால், பள்ளிகளில், தினமும், நுாறு சதவீத மாணவர்களின் வருகை, உறுதி செய்யப்படாமல் உள்ளது. இந்நிலையில், தீபாவளிக்கு சொந்த ஊர் சென்ற மாணவ, மாணவியர், இன்னும் பள்ளிக்கு திரும்பாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள், பள்ளிக்கு வராத மாணவர்களின் பெற்றோரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, விவரம் கோரி வருகின்றனர். அவர்களை, சூசகமாக பள்ளிக்கு அனுப்பி வைக்கவும் மன்றாடுகின்றனர்.இது குறித்து, பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:மாணவர்களைக் கட்டாயப்படுத்தி பள்ளிக்கு வரவழைக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி வராத மாணவர்களுக்கு வருகைப்பதிவில், 'பிரசன்ட்' போடப்படுகிறது. இதனை சாதகமாக்கிக்கொள்ளும் மாணவ, மாணவியர், பள்ளி வருவதை தவிர்த்து வருகின்றனர். பல பள்ளிகளில், அவர்களின் வருகை குறைவாகவே காணப்படுகிறது.மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, பெற்றோர்கள் செயல்பட வேண்டும். பள்ளிகளில் நோய்த்தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதால் அச்சமின்றி பள்ளிக்கு அனுப்பலாம். தற்போது, மாணவர்களை ஒருங்கிணைக்கும் பணி காரணமாக பிற மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X