துளிகள் செய்தி

தமிழ்நாடு

அறிவியல் பூங்கா அமைக்க தமிழக அரசுக்கு கோரிக்கை

Added : நவ 17, 2021
Share
Advertisement
உடுமலை: உடுமலை பகுதியில், அறிவியல் பூங்கா அமைக்க, கலிலியோ அறிவியல் கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்னளர்.உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் வாயிலாக பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடையே அறிவியல்சார் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், உடுமலை பகுதியில், அறவியல் பூங்கா அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, கல்வி அமைச்சர்

உடுமலை: உடுமலை பகுதியில், அறிவியல் பூங்கா அமைக்க, கலிலியோ அறிவியல் கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்னளர்.உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் வாயிலாக பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடையே அறிவியல்சார் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், உடுமலை பகுதியில், அறவியல் பூங்கா அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, கல்வி அமைச்சர் மகேஷிடம் அளித்த மனு: உடுமலை அருகே அமராவதி, திருமூர்த்தி மற்றும் ஆழியாறு அணைகள், சுற்றுத்தலங்களாக உள்ளது.ஆண்டுதோறும், அதிகப்படியான பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர் வருகை புரிகின்றனர்.அவ்வகையில், அறிவியல் பூங்கா அமைத்தால், கல்விச் சுற்றுலா வரும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.மேலும், அறிவியல் மனப்பான்மையையும் ஆராய்ச்சித்துறையில் ஈடுபாட்டையும் வளர்க்க முடியும். கிராமப்புற மாணவர்கள் அறிவியல் துறையில் சாதிக்க முடியும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X