சென்னை: இன்று(நவ.,18) அதிகனமழை பெய்ய இருப்பதால் மக்கள் இரண்டு நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
![]()
|
குடிநீர், பால், உணவு காய்கறிகளை இரண்டு நாட்களுக்கு தேவையான அளவிற்கு வாங்கி இருப்பு வைத்து கொள்ள வேண்டும். நீர்நிலைகள், கால்வாய்கள் மழைநீர் தேங்கி இருக்கும் இடத்தில் மக்கள் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
தெருவிளக்கு மின்கம்பங்கள், மின் இணைப்பு பெட்டிகளை தொடுதல் மற்றும் மரங்களின் கீழ் நிற்பதை தவிர்க்க வேண்டும்.
![]()
|
மழை தொடர்பான உதவிக்கு 94454 77205, 94450 25819,94450 25820,94450 25821 என்ற வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளலாம்.மேலும் மழைதொடர்பான புகார் மற்றும் நிவாரண உதவிக்கு 1913 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement