சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

உஷாரய்யா உஷாரு...!

Added : நவ 17, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
உஷாரய்யா உஷாரு...!'பரவாயில்லையே... இவர் செய்வது புதுவிதமான அரசியலாக இருக்கிறதே...' என, மத்திய பிரதேச மாநில காங்., செயலர் மனோஜ் சுக்லாவை பாராட்டுகின்றனர், அங்குள்ள அரசியல்வாதிகள்.இங்கு முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த சட்டசபை தேர்தலில் கமல்நாத் தலைமையிலான காங்., வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தபோதும், எம்.எல்.ஏ.,க்கள் பலர்,

அக்கம் பக்கம்


உஷாரய்யா உஷாரு...!'பரவாயில்லையே... இவர் செய்வது புதுவிதமான அரசியலாக இருக்கிறதே...' என, மத்திய பிரதேச மாநில காங்., செயலர் மனோஜ் சுக்லாவை பாராட்டுகின்றனர், அங்குள்ள அரசியல்வாதிகள்.இங்கு முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த சட்டசபை தேர்தலில் கமல்நாத் தலைமையிலான காங்., வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தபோதும், எம்.எல்.ஏ.,க்கள் பலர், பாஜ.,வுக்கு ஓட்டம் பிடித்ததால், காங்., ஆட்சி கவிழ்ந்தது.
இங்கு மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்காக கமல்நாத், பலவிதமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு போட்டியாக, காங்., மாநில செயலர் மனோஜ் சுக்லாவும் களத்தில் இறங்கியுள்ளார்.சமீபத்தில், ஒரு கோவிலின் வாசலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஐந்து பெண்களை, ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச் சென்று, அவர்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார், சுக்லா. அடுத்த நாள் இந்த செய்தி பத்திரிகைகளில் வெளியானதும், ம.பி., அரசியல் களம் பரபரப்பாகி விட்டது. 'அரசியல்வாதியாக இருந்தாலும், தன் கையில் உள்ள காசை செலவழித்து, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறாரே... இந்த காலத்தில் எந்த அரசியல்வாதி இப்படி செய்கிறார்...' என, அனைவரும் பாராட்டி தள்ளினர்.கமல்நாத் ஆதரவாளர்களோ, 'தலைவரே, இந்த மனோஜ் சுக்லா அடுத்த தேர்தலில் உங்களுக்கு போட்டியாக முதல்வர் வேட்பாளராக களத்தில் நிற்க தயாராகி விட்டார். உஷாராக இருங்கள்' என கூறி, அவரை பீதியில் ஆழ்த்தியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Alex -  ( Posted via: Dinamalar Android App )
21-நவ-202117:49:38 IST Report Abuse
Alex someone should take 500 urchins to shukla house daily and ask him to feed in five star. can press do it. never . gimmick.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X