சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : நவ 17, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு: தமிழக அரசின் புதிய அறிமுகமான, 'வலிமை' சிமென்ட், புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தயாரிக்கப்படும் சிமென்டுடன் ஒப்பிடுகையில், இது, அதிக உறுதித்தன்மை வாய்ந்தது. எனினும், 'அம்மா' சிமென்ட் திட்டம் தொடரும். அதுவும் அரசு சிமென்ட் தான்.'டவுட்' தனபாலு: ஏழை மக்களுக்காக, 'அம்மா' சிமென்ட் ஏற்கனவே


'டவுட்' தனபாலு

தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு: தமிழக அரசின் புதிய அறிமுகமான, 'வலிமை' சிமென்ட், புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தயாரிக்கப்படும் சிமென்டுடன் ஒப்பிடுகையில், இது, அதிக உறுதித்தன்மை வாய்ந்தது. எனினும், 'அம்மா' சிமென்ட் திட்டம் தொடரும். அதுவும் அரசு சிமென்ட் தான்.

'டவுட்' தனபாலு: ஏழை மக்களுக்காக, 'அம்மா' சிமென்ட் ஏற்கனவே தயாரிக்கப்படும் நிலையில், 'வலிமை' என்ற பெயரில் புதிய சிமென்ட் தயாரித்து விற்பனை செய்கிறது, தமிழக அரசு. அந்த வகையில், அம்மா உணவகத்தை நிறுத்தி விட்டு, 'தளபதி' உணவகம் அல்லது 'தலைவர்' உணவகம் என்ற பெயரில் குறைந்த விலை உணவகத்தை தமிழக அரசு துவக்குமோ என்ற, 'டவுட்' வருகிறதே!


தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், எம்.ஜி.ஆர்., காலத்துலேயே உரிமைகள் விட்டுக் கொடுக்கப்பட்டன. முல்லை பெரியாறு அணையை வலுப்படுத்த, தி.மு.க., தான் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. தமிழகத்தின் நீராதாரங்களை பாதிக்கும் வகையில் புதிய அணைகளை கட்ட, கேரளா, கர்நாடகா முயன்றால் அனுமதிக்க மாட்டோம்.

'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வதை பார்த்தால், எம்.ஜி.ஆர்., விட்டுக் கொடுத்தது போல, நாங்களும் விட்டுக் கொடுத்தது விட்டோம் என சொல்ல வருகிறீர்களோ என்ற, 'டவுட்' வருகிறது. தி.மு.க., அரசுக்கு, கருணாநிதி, அண்ணாதுரை, ஈ.வெ.ரா., தானே முன்மாதிரி. அவர்கள் சொல்படி நடக்கும் அரசு என பீத்துகிறீர்கள். ஆனால், முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மட்டும் எம்.ஜி.ஆர்., வழியை பின்பற்றுகிறீர்களோ?


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்:
கொரோனா காலத்தில் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டவை, இப்போது வழக்கமான ரயில்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும், 'முன்பதிவு செய்தவர்களிடம் வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணம் தரப்படாது' என, ரயில்வே அறிவித்துள்ளது. இது நியாயமல்ல. கூடுதலாக செலுத்தப்பட்ட தொகையை திருப்பித் தருவது தான் முறை. முன்னதாக பதிவு செய்த பயணியரை தண்டிக்க கூடாது.

'டவுட்' தனபாலு: இந்த விவகாரத்தை பார்க்கும் போது, கந்து வட்டிக்காரர்கள் போல, ரயில்வே துறை செயல்படுகிறதோ என்ற, 'டவுட்' வருகிறது. பயணியர் கூடுதலாக கொடுத்த கட்டணத்தை திருப்பி தர மாட்டோம் என்பது அடாவடியான செயல். மக்கள் நலனுக்காகத் தான் அரசு துறைகள் என்பது காலப்போக்கில் மாறி விட்டதோ!


Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
18-நவ-202119:12:27 IST Report Abuse
D.Ambujavalli மக்கள் பிரசனைகளை தீர்ப்பதில் போட்டியைக் காணோம் அன்று அவர் விட்டுக்கொடுத்தார், இன்று நாங்களும் அதையே செய்கிறோம் என்று எல்லா இடங்களிலும் 'விட்டுக்கொடுக்க' நீங்கள் எதற்கு?
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
18-நவ-202116:33:02 IST Report Abuse
Anantharaman Srinivasan சிறப்பு ரயில்கள் சாதாரண ரயில்களாக மாற்றப்பட்டபின், பயணியர் சிறப்பு ரயிலுக்கு கூடுதலாக கொடுத்த கட்டணத்தை திருப்பி தர மாட்டோம் என்பது unfair trade practice சட்டத்தின் கீழ் வரும். இதே பட்ஜெட்க்கு பிறகு ரயில்கட்டணங்கள் உயர்ந்தபின் முன்பதிவு செய்தவர்களிடம் Difference fare வசூலிப்பது மட்டும் எந்த விதத்தில் நியாயம் ??
Rate this:
Cancel
rajan - erode,இந்தியா
18-நவ-202108:47:57 IST Report Abuse
rajan இந்த விவகாரத்தை பார்க்கும் போது, கந்து வட்டிக்காரர்கள் போல, ரயில்வே துறை செயல்படுகிறதோ என்ற, 'டவுட்' வருகிறது. பயணியர் கூடுதலாக கொடுத்த கட்டணத்தை திருப்பி தர மாட்டோம் என்பது அடாவடியான செயல். மக்கள் நலனுக்காகத் தான் அரசு துறைகள் என்பது காலப்போக்கில் மாறி விட்டதோ இதை செய்வது மோடி அரசுதான் கந்து வட்டிக்கார ஆட்சி ஒன்றிய பிஜேபி ஆட்சி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X