தமிழ்நாடு

அமைச்சருக்காக அவசர சுத்தம்: நகராட்சியின் 'சூப்பர் பாஸ்ட்' தூய்மை பணி

Added : நவ 17, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் மக்கள் சபை கூட்டத்துக்கு வந்த அமைச்சர் பயணிக்கும் ரோட்டில், அவர் வருகைக்கு ஒரு மணி நேரம் முன், நகராட்சி சார்பில் அவசர அவசரமாக துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டு, புழுதி பறக்காமல் இருக்க தண்ணீர் தெளித்தது, மக்களின் கேலிக்கு உள்ளானது.பொள்ளாச்சி நகரில், அரசு போக்குவரத்து கழக டிப்போக்களை அடுத்துள்ள வி.கே.வி., லே - அவுட்டில் உள்ள தனியார் மண்டபத்தில்,
அமைச்சருக்காக அவசர சுத்தம்: நகராட்சியின் 'சூப்பர் பாஸ்ட்' தூய்மை பணி

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் மக்கள் சபை கூட்டத்துக்கு வந்த அமைச்சர் பயணிக்கும் ரோட்டில், அவர் வருகைக்கு ஒரு மணி நேரம் முன், நகராட்சி சார்பில் அவசர அவசரமாக துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டு, புழுதி பறக்காமல் இருக்க தண்ணீர் தெளித்தது, மக்களின் கேலிக்கு உள்ளானது.பொள்ளாச்சி நகரில், அரசு போக்குவரத்து கழக டிப்போக்களை அடுத்துள்ள வி.கே.வி., லே - அவுட்டில் உள்ள தனியார் மண்டபத்தில், நேற்று மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் மக்கள் சபை கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் உள்பட பலர் பங்கேற்றனர்.நிகழ்ச்சி முடிந்து ஜமீன் ஊத்துக்குளி, சூளேஸ்வரன்பட்டி, சமத்துார், கோட்டூர் பேரூராட்சிகளுக்கு அமைச்சர் சென்றார்.அமைச்சர், காலை, 11:00 மணிக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரோட்டின் ஓரங்களில் பல மாதங்களாக குவிந்து கிடந்த குப்பை கழிவுகளை நகராட்சி பணியாளர்கள் லாரியை கொண்டு வந்து, 10:00 மணிக்கு அவசர அவசரமாக அகற்றினர்.அதேபோன்று, ரோட்டில் தேங்கியிருந்த மண் திட்டுகள் அகற்றப்பட்டது. அமைச்சர், கலெக்டர் உள்ளிட்டோரின் வாகனங்கள் செல்லும் போது, புழுதி பறக்காமல் இருக்க, நகராட்சி லாரி வாயிலாக தண்ணீர் தெளிக்கப்பட்டது.திருவள்ளுவர் திடல் - மீன்கரை ரோடு மற்றும் பல்லடம் ரோடு உள்ளிட்ட வழித்தடங்களில், ரோட்டில் தண்ணீர் ஊற்றினர்.'ஏசி' காரில் செல்லும் அமைச்சருக்காக, அசுர வேகத்தில் பணியாற்றிய அதிகாரிகள், மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறுகிறோம் என்பதை உணர்ந்து, மக்களுக்கான பணிகளில் அக்கறை செலுத்தியிருந்தால், பாராட்டு கிடைத்திருக்கும்.இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், 'அமைச்சர் இந்த வழியாக செல்வதால், குப்பை மேடாக கிடந்த ரோடு இப்போ சுத்தமாகுது. ரோட்டில் இருந்து மண் அகற்றப்படுகிறது. புழுதி பறக்காமல் இருக்க தண்ணீர் தெளிக்கின்றனர். இந்த அதிகாரிகள் எல்லாம், இவ்வளவு நாள் எங்கிருந்தார்கள்,' என்றனர்.நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அமைச்சர், மாவட்ட கலெக்டர் வாகனங்களுடன், மற்ற வாகனங்கள் அதிகளவில், வேகமாக செல்லும் போது புழுதி பறக்கும் என, நகராட்சி கமிஷனரிடம் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.எனவே, அமைச்சர் வாகனம் செல்லும் ரோட்டில் தண்ணீர் தெளிக்கப்பட்டது. பொதுமக்கள் மீது புழுதி படக்கூடாது என்ற நோக்கில் தெளித்தோம். இது குடிநீர் அல்ல; மாற்று பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் நீரை தான் தெளித்தோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X