சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

தந்தை வழியில் நடக்கணும்!

Added : நவ 17, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
தந்தை வழியில் நடக்கணும்!ரா.முத்துசாமி, கோவையிலிருந்து எழுதுகிறார்: ஜெய்பீம் பட வாயிலாக இரு சமூகத்துக்கு இடையே பகையுணர்வு துாண்டப்பட்டு இருப்பதாக, தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யாவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, அந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வழக்கில் குறிப்பிடப்பட்டிருக்கும் உண்மையான பெயரான


தந்தை வழியில் நடக்கணும்!



ரா.முத்துசாமி, கோவையிலிருந்து எழுதுகிறார்: ஜெய்பீம் பட வாயிலாக இரு சமூகத்துக்கு இடையே பகையுணர்வு துாண்டப்பட்டு இருப்பதாக, தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யாவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, அந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வழக்கில் குறிப்பிடப்பட்டிருக்கும் உண்மையான பெயரான 'அந்தோணிசாமி' என்பதை வேண்டுமென்றே, 'குருமூர்த்தி' என மாற்றியுள்ளனர்.படத்தில் கொடுமைக்கார போலீஸ் எஸ்.ஐ., கதாபாத்திரத்தை, ஒரு ஜாதிப் பிரிவைச் சேர்ந்தவர் போல சித்தரித்துள்ளனர்.ஜெய் பீம் படம் எடுக்க, உண்மை சம்பவத்தில் காரணமாயிருந்த நபர், அரசு பதிவேட்டின்படி, 32 திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்; இருவரை கொலை செய்துள்ளார்.
ஆறு வழக்குகளில், திருட்டை தடுக்க முயன்ற வீட்டின் உரிமையாளர்களை கொடூரமாக தாக்கியுள்ளார். அப்படிப்பட்ட திருடனை, மிகச் சிறந்த மனிதராக காட்டி படமெடுத்துள்ளனர் என்ற விமர்சனங்களும் முன் வைக்கப்படுகின்றன.இப்படத்துக்கு 10 கோடி ரூபாய் செலவிட்ட சூர்யா, 70 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளாராம்.இப்படம், 'ஓடிடி'யில் வெளியிடப்பட்டது. இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தன் அடுத்த படத்தை, 'சன் பிக்சர்ஸ்' நிறுவனத்திற்கு கொடுத்துள்ளார், சூர்யா.
இதிலிருந்தே அவரின் கெட்டிக்காரத்தனம் தெரிகிறது. படத்தை, 'சன் பிக்சர்ஸ்' வழங்கினால், எந்த தியேட்டர் உரிமையாளர்களும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என, விபரமாக யோசித்து முடிவெடுத்து உள்ளார்.சூர்யா... நீங்கள் எவ்வளவு கோடி ரூபாய் சம்பாதிக்கின்றீர்கள் என்பது, ஒரு பிரச்னையே இல்லை; நீங்கள் சம்பாதிக்கக் கூடாதென நாங்கள் சொல்லவும் இல்லை.

இன்னும் பல 100 கோடி ரூபாய் நீங்கள் சம்பாதிக்க வேண்டும். ஏழைகளுக்கு நிறைய உதவ வேண்டும். தமிழகத்தில் 100 கோடி ரூபாய் சம்பாதித்த எந்த நடிகரும் செய்யாத உதவிகளை செய்து, மக்களிடம் நல்ல பெயர் பெற வேண்டும்.உங்களுக்கு, அரசியலுக்கு வரும் ஆசையிருக்கலாம். ஆனால், ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் குருவாக நினைக்கும் நடிகர் கமல், அரசியலில் பிரகாசிக்க முடியவில்லை.மக்கள், அவரை நடிகராகத் தான் பார்க்கின்றனரே தவிர, அரசியல் தலைவராக ஏற்கவில்லை.அதனால், நீங்கள் நடிகராக இருந்தே உதவிகளை செய்யுங்கள். நம் பின்னால், ஜாதி இருக்கு; நமக்கு ஆதரவு தருவர் என நம்ப வேண்டாம்.
தேர்தலில், அந்தந்த தொகுதியில் எந்த ஜாதியைச் சேர்ந்தோர் அதிகம் வசிக்கின்றனரோ, அதே ஜாதியை சேர்ந்தவரையே தங்கள் வேட்பாளராக, அரசியல் கட்சிகள் நிறுத்துகின்றன. அதனால், ஜாதி பின்புலம் உங்களுக்கு உதவாது.உங்களின் அரசியல் ஆர்வத்துக்கு, நிச்சயம் மக்கள் ஆதரவு கிடைக்காது; அவர்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. அரசியலுக்கு அப்பாற்பட்ட நடிகராகவே உங்களை பார்க்கின்றனர்; அவ்வாறே நீங்களும் இருங்கள்.
உங்களின் தந்தை சிவக்குமார் எவ்வாறு நல்ல பெயர் சம்பாதித்தாரோ, அதே வழியில் நீங்களும் பயணியுங்கள்; அதுவே, உங்களுக்கு நல்லது!


எதுக்கு போலீஸ்பாதுகாப்பு?



கலைப்பித்தன், கடலுாரிலிருந்து எழுதுகிறார்: அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சண்முகத்திற்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.கடந்த 2006 சட்டசபை தேர்தலின்போது, அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால், போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. இப்போது எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதால், 15 ஆண்டுகளாக அவருக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது.'மாஜி' அமைச்சர், எம்.எல்.ஏ., எம்.பி.,க்களுக்கு எதற்காக போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்? அதற்காக, மக்கள் வரிப்பணத்தில் இருந்து பல கோடி ரூபாய்களை ஏன் செலவழிக்க வேண்டும்?
முதல்வர், முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோருக்கு மட்டுமே, பாதுகாப்பு வழங்க வேண்டும். காவல் துறையின் 20 சதவீத போலீஸ் சக்தி, இவர்களின் பாதுகாப்புக்காகவே செலவழிக்கப்படுகிறது.மக்களுக்கு சேவை செய்யவே, அரசியலுக்கு வருகின்றனர். ஆட்சியில் அமர்ந்த உடன், பாதுகாப்பு என, வேலி போட்டு கொள்கின்றனர்; மக்கள் எப்படி அவர்களை அணுக முடியும்?உண்மையான மக்கள் சேவகருக்கு, போலீஸ் பாதுகாப்பே தேவை இல்லை.கடந்த 1954ல், முதல்வராக பொறுப்பேற்ற காமராஜர் காரில் புறப்பட்டார். அதற்கு முன் கிளம்பிய போலீஸ் வாகனத்தில் இருந்து, 'சைரன்' ஒலி கிளம்பியது.
உடனே காமராஜர், 'அது என்னய்யா சத்தம்... நான் உயிரோடு தான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க' என, 'கமென்ட்' அடித்து, அந்த வாகனத்தை வேண்டாம் என மறுத்தார். அவர் தான், மக்கள் தலைவர்!இப்போது இருக்கும் ஆட்சியாளர்கள் செய்யும் அலப்பறைகளை சொல்லி மாளாது. இவர்கள், மக்கள் தலைவர்கள் இல்லை; சொத்து
குவிக்கும் வியாபாரிகள்!


யாரை முன்னிறுத்த வேண்டும்?



-பா.விஜய், காட்டிகன், சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை கீழ்ப்பாக்கம் அருகே கல்லறை பகுதியில் மயங்கிக் கிடந்த நபரை மீட்டு, தன் தோளில் சுமந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த, டி.பி.சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு பாராட்டுகள்!போலீசார் பலர், மழைக் காலத்தில் பசியால் வாடும் ஆதரவற்றோரை கவனித்து, அவர்களுக்கு உணவு அளித்து வருகின்றனர். மனித
நேயமிக்க போலீசார் பலர் உள்ளனர். அவர்களில் ஒருவர் தான் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி.அவரை பாராட்டியபோது, 'பெரிதாக சமூகத் தொண்டு செய்து விட்டதாக நினைக்கவில்லை. அதுவே போதுமானது' என, அடக்கமாக பதில் அளித்துள்ளார்.தற்போது நம் நாட்டிற்கு இவரைப் போன்ற அதிகாரிகளே மிகுதியாக தேவைப்படுகின்றனர். காவல் துறையில் இருக்கும் சில, 'கறுப்பாடு'களை முன்னிறுத்தி, அனைவரும் மோசமான நபர்கள் என்ற எண்ணத்தை மக்களிடம் விதைக்கக் கூடாது. நேர்மையும், நல்மனமும் உடைய காவலர்களையே, நாம் மக்கள் மத்தியில் முன்னிறுத்த வேண்டும்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
18-நவ-202116:45:23 IST Report Abuse
Anantharaman Srinivasan காவல் துறையில் அனைவரும் மோசமான நபர்கள் அல்லர். ஆனால் 90% மேல்வரும்படியிலேயே குறியாக உள்ளனர்..
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
18-நவ-202116:40:21 IST Report Abuse
Anantharaman Srinivasan இவர்கள், மக்கள் தலைவர்கள் இல்லை சொத்து க்குத் தான் தலைவர்கள்..
Rate this:
Cancel
seshadri - chennai,இந்தியா
18-நவ-202113:03:11 IST Report Abuse
seshadri நடிகர் சூர்யாவிற்கு எதற்கு போலீஸ் பாதுகாப்பு அவர் கேட்டாரா கோடிகளில் சம்பாதிக்கும் அவருக்கு பாதுகாப்பிற்கு ஆள் போட்டு கொள்ள முடியாதஆ . நம் வரிப்பணம் இப்படி வீணடிக்கப்படுகிறது. தகராறு வரும் என்று தெரிந்தே படம் எடுத்தல் இந்த மாதிரி தான் ஆகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X