முதல்வரை சந்திக்க கான்ட்ராக்டர்கள் முடிவு!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

முதல்வரை சந்திக்க கான்ட்ராக்டர்கள் முடிவு!

Added : நவ 17, 2021 | கருத்துகள் (2)
Share
முதல்வரை சந்திக்க கான்ட்ராக்டர்கள் முடிவு!''கட்சிக்கு எதிரா செயல்பட்டவர் கடையை திறந்து வச்சிருக்காருங்க...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.''எந்தக் கட்சி விவகாரம் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''கோவை மாவட்டம், மதுக்கரை ஒன்றிய நான்காவது வார்டு தி.மு.க., கவுன்சிலர் பிரகாஷ்... ஒன்றிய சேர்மன் தேர்தல்ல, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தந்து, அதுக்கு

டீ கடை பெஞ்ச்


முதல்வரை சந்திக்க கான்ட்ராக்டர்கள் முடிவு!



''கட்சிக்கு எதிரா செயல்பட்டவர் கடையை திறந்து வச்சிருக்காருங்க...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.

''எந்தக் கட்சி விவகாரம் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''கோவை மாவட்டம், மதுக்கரை ஒன்றிய நான்காவது வார்டு தி.மு.க., கவுன்சிலர் பிரகாஷ்... ஒன்றிய சேர்மன் தேர்தல்ல, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தந்து, அதுக்கு பிரதிபலனா, தனக்கு துணை தலைவர்
பதவியை வாங்கிட்டாரு பா...

''அதுவும் இல்லாம, சட்டசபை தேர்தல்லயும், தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவா பிரசாரம் செய்யாம ஒதுங்கியே இருந்திருக்கார்... போன வாரம், இவர் இருசக்கர வாகன 'ஷோ ரூம்' ஒண்ணை மலுமிச்சம்பட்டியில திறந்தாரு பா...

''இதை, மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வச்சார்... அவரிடம், பிரகாஷ் பற்றி கட்சியின் மூத்த நிர்வாகிகள் எடுத்து சொல்லி, 'நீங்க போய் ஷோ ரூமை திறந்து வைக்கக் கூடாது'ன்னு அறிவுறுத்தி இருக்காங்க... அதை அமைச்சர் காதுல போட்டுக்காததால, கட்சியின் உண்மை விசுவாசிகள் வருத்தத்துல இருக்காங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''பார்க்கிறது என்னமோ சாதாரண ஏட்டு வேலை தான்... ஆனா, லட்சங்கள்ல வாரி குவிக்காரு வே...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார்,
அண்ணாச்சி.

''யாருப்பா அது...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.

''திருச்சி, சமயபுரம் பகுதியில பல ஆண்டுகளா சட்டவிரோத பார்கள் நடத்தி, திருட்டு மதுபானம் வித்துட்டு இருந்த குப்புசாமின்னு ஒருத்தரை, சமீபத்துல மதுவிலக்கு போலீசார் கைது செஞ்சாவ...

''குப்புசாமியின் குடும்பத்தினர், கொள்ளிடம் ஸ்டேஷன்ல ஏட்டா இருக்கிற ஒருத்தரை அணுகி, 'உங்களால தான், குப்புசாமி சட்டவிரோத செயல்கள்ல ஈடுபட்டாரு... அவரை நீங்க தான் காப்பாத்தணும்'னு கேட்டிருக்காவ வே...

''அதுக்கு, 'எனக்கு பல உயர் அதிகாரிகளை தெரியும்... காப்பாத்திரலாம்... ஆனா, கொஞ்சம் செலவாகும்'னு கொக்கியை போட்டு அனுப்பியிருக்காரு வே...

''இந்த ஏட்டு, தீபாவளிக்கு மட்டும் பல லட்சங்களை வாரி குவிச்சிட்டாரு... சமயபுரம், கொள்ளிடம் பகுதியிலயே 10 ஆண்டுகளா சுத்திட்டு இருக்காரு வே...

''எஸ்.பி., தனிப்பிரிவுல இருந்தவர், பல புகார்கள் காரணமா, கொள்ளிடத்துக்கு மாத்தப்பட்டாரு... அங்க எந்த வேலையும் செய்யாம, 'மறுபடியும் தனிப்பிரிவுக்கே போயிடுவேன்'னு உதார் விட்டுட்டு திரியுதாரு வே...'' என முடித்தார் அண்ணாச்சி.

''சுரேஷ் வீடு வரைக்கும் போகணும் பா...'' என, அன்வர்பாய் கிளம்ப, ''முதல்வரை சந்திக்க முடிவு பண்ணியிருக்காங்க...'' என, கடைசி மேட்டருக்கு மாறினார் அந்தோணிசாமி.

''யாரைச் சொல்றேள்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சியில, 'மாஜி' கமிஷனர் பல கோடி ரூபாய் ஊழல் செய்த நிலையில, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்துட்டு இருக்குதுங்க... அதே நேரம், நகராட்சியில செய்த வளர்ச்சி பணிகளுக்கு 'பில்' தொகை கிடைக்காம, கான்ட்ராக்டர்கள் தவிச்சிட்டு இருக்காங்க...

''இது சம்பந்தமா, ஆளுங்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வாயிலா, துறையின் அமைச்சரிடம் புகார் தெரிவிச்சும், பில் தொகை வந்தபாடில்லைங்க... இதனால, வெறுத்து போயிருக்கிற கான்ட்ராக்டர்கள், அடுத்த கட்டமா முதல்வரை சந்திச்சு முறையிட தயாராகிட்டு இருக்காங்க...'' என்றார் அந்தோணிசாமி.அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X