பொது செய்தி

இந்தியா

இரவு நேர பஸ் போக்குவரத்தை, பி.எம்.டி.சி.துவக்க முடிவு

Added : நவ 17, 2021
Share
Advertisement
பெங்களூரு:பயணியரின் வசதிக்காக, இரவு நேர பஸ் போக்குவரத்தை, பி.எம்.டி.சி., எனும் பெங்களூரு மாநகர போக்குவரத்துக்கழகம் துவக்க முடிவு செய்துள்ளது.இது குறித்து, பி.எம்.டி.சி., நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:கொரோனா பரவியதால், பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. தொற்று குறைந்து ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின், பகல் நேரத்தில் பஸ் போக்குவரத்து

பெங்களூரு:பயணியரின் வசதிக்காக, இரவு நேர பஸ் போக்குவரத்தை, பி.எம்.டி.சி., எனும் பெங்களூரு மாநகர போக்குவரத்துக்கழகம் துவக்க முடிவு செய்துள்ளது.

இது குறித்து, பி.எம்.டி.சி., நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:கொரோனா பரவியதால், பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. தொற்று குறைந்து ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின், பகல் நேரத்தில் பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது.வெளியூரிலிருந்து வருவோர், இரவு 'ஷிப்ட்' பணிகளில் பணி முடிந்து வீடு செல்லும் மக்கள், பஸ் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.

இரவு ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், இவர்களின் வசதிக்காக, இரவு பஸ் சேவை துவங்கப்படுகிறது. கொரோனா விதிமுறைகளுடன், பஸ்கள் இயக்கப்படும்.பெங்களூரு மற்றும் புறநகர்ப்பகுதிகளில், இரவு நேர பஸ்கள் இயக்கப்படும்.

தற்போதைக்கு 70 பஸ்களை பி.எம்.டி.சி., இயக்க முடிவு செய்துள்ளது. படிப்படியாக பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இரவு நேரத்தில் பயணிப்போர், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி வரும்.மெஜஸ்டிக் - பனசங்கரி, மெஜஸ்டிக் - ஏ.ஜ.எஸ்., லே - அவுட், மெஜஸ்டிக் - சுல்தான் பாளையா, மெஜஸ்டிக் - உத்தரஹள்ளி, மெஜஸ்டிக் - ஜம்பு சவாரி தின்னே, மெஜஸ்டிக் - அஞ்சனாபுரா, மெஜஸ்டிக் - கெங்கேரி, மெஜஸ்டிக் - தொட்டபஸ்தி.மெஜஸ்டிக் - பி.எம்.இ.எல்., லே - அவுட் 5வது ஸ்டேஜ், மெஜஸ்டிக் - பிடதி உட்பட, பல்வேறு இடங்களுக்கு, இரவு பஸ்கள் இயக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X