தமிழ்நாடு

உச்சம் தொடும் தக்காளி! மழையால் சந்தைகளுக்கு வரத்து சரிந்தது... 100 ரூபாயை நோக்கி பறக்கும் விலை!

Added : நவ 17, 2021
Share
Advertisement
உடுமலை: தொடர் கனமழையால், உடுமலை பகுதியில், விளைநிலங்களில், தண்ணீர் தேங்கி, தக்காளிச்செடிகள் அழுகி கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது; சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து, 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி ஆயிரம் ரூபாய் வரை ஏலம் போனது.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்தில், 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், செடி மற்றும் கொடி முறையில், தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.அதிலும்,
உச்சம் தொடும் தக்காளி! மழையால் சந்தைகளுக்கு வரத்து சரிந்தது... 100 ரூபாயை நோக்கி பறக்கும் விலை!

உடுமலை: தொடர் கனமழையால், உடுமலை பகுதியில், விளைநிலங்களில், தண்ணீர் தேங்கி, தக்காளிச்செடிகள் அழுகி கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது; சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து, 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி ஆயிரம் ரூபாய் வரை ஏலம் போனது.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்தில், 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், செடி மற்றும் கொடி முறையில், தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.அதிலும், ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பிற மாநிலங்கள், மாவட்டங்களில் சாகுபடி இல்லாத நிலையில், உடுமலை பகுதியில் மட்டும், ஆக., முதல் நவ., வரை தக்காளி வரத்து சீசன் காலமாக இருக்கும்.உடுமலை பகுதிகளில் விளையும், தக்காளி, உடுமலை சந்தைக்கு கொண்டு வரப்பட்டு, இங்குள்ள கமிஷன் கடைகளில், ஏல முறையில் விற்பனை செய்யப்படும்.கேரள மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து, வியாபாரிகள் வந்து தக்காளி கொள்முதல் செய்து வருகின்றனர். உடுமலை சந்தைக்கு சராசரியாக, 14 கிலோ கொண்ட பெட்டி, 6 முதல், 7 ஆயிரம் பெட்டிகள் வரை வரத்து காணப்படும்.உடுமலை பகுதிகளில், கடந்த ஒரு மாதமாக கன மழை பெய்து வருவதால், வயல்களில் உரம்பு நீர் தேங்கியுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட விளைநிலங்களில், மழை நீர் அதிகளவு தேங்கி, செடிகளில் வேர் அழுகல், பூ உதிர்தல், காய்களில் நோய் தாக்கி, அழுகியுள்ளன.இந்நிலையில், கொடி முறையில் சாகுபடி செய்யப்பட்ட விளைநிலங்களில் இருந்து மட்டும், சந்தைக்கு தக்காளி வரத்து காணப்படுகிறது. கடந்த, சில நாட்களாக, 200 முதல் 300 பெட்டிகள் மட்டுமே வரத்து காணப்படுகிறது.கேரள மாநிலம் மற்றும் பிற மாவட்ட வியாபாரிகளும் வந்து, ஏல முறையில் கொள்முதல் செய்வதால், தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இரு நாட்களாக, 14 கிலோ கொண்ட தரமான தக்காளி பெட்டி, ஆயிரம் ரூபாய் வரை விற்று வருகிறது. சில்லரை விற்பனையில், கிலோ 80 ரூபாய் வரை விற்று வருகிறது; மேலும், விலை நுாறு ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.வியாபாரிகள் கூறுகையில்,' தொடர் மழை பெய்தால், காய்கறி வரத்து பெருமளவு குறைந்து விடும். தக்காளி மற்ற மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படாத நிலையில், கொடி முறையில் சாகுபடி செய்த, வீரிய ஒட்டு ரக தக்காளி ரகங்கள் மட்டுமே வரத்து காணப்படுகிறது. நல்ல சீசன் சமயத்தில், பெட்டி, அதிகபட்சமாக, 700 ரூபாய்க்கு விற்றுள்ளது; பல ஆண்டுகளுக்கு பின், தற்போது, ஆயிரம் ரூபாயை தொட்டுள்ளது. அதே போல், மற்ற காய்கறிகளிலும் விலை உயர்ந்துள்ளது,' என்றனர்.விவசாயிகள் கூறுகையில்,' தக்காளி அறுவடை சீசன் சமயத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், செடிகள் அழுகியும், காய்கள் பழுத்தும், புள்ளி விழுந்தும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாகுபடி செய்த வயல்களில் பறிக்க முடியாமல், முழுமையாக வீணாகியுள்ளது. மழையால் பாதித்த பயிர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும்,' என்றனர்.நுகர்வோர் பாதிப்புதொடர் மழை காரணமாக, தக்காளி கிலோ, 80 முதல், 100 ரூபாய் வரை கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல், சின்ன வெங்காயம், கிலோ, ரூ. 50, வெண்டை, கத்தரி, அவரை, புடலை பாகற்காய் என அனைத்து காய்கறிகளும் விலை உயர்ந்துள்ளதோடு, பெரும்பாலான காய்கறிகள் மழைக்கு அழுகியும், தரமற்றதாகவும் உள்ளது. காய்கறி விலை உயர்வால் பொதுமக்களும் அதிகளவு பாதித்துள்ளனர்.


மற்றவை விலையும் விர்ர்...

உடுமலை பகுதிகளில் பந்தல் சாகுபடியாக, வெண்டை, அவரை, புடலை மற்றும் பாவற்காய் சாகுபடி செய்யப்படுகிறது. கத்தரி மற்றும் மிளகாய் சாகுபடியும் அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது. கன மழை காரணமாக, பந்தல் காய்கறி சாகுபடியும் பாதித்து, மற்ற காய்கறிகள் வரத்தும் பெருமளவு குறைந்துள்ளது.வெண்டை, அவரை, புடலை, பாவற்காய் ஆகியவை, கடந்த வாரம், கிலோ, 15 ரூபாய் என்ற அளவிலேயே ஏலம் போனது. மழை காரணமாக, கிலோ, 50 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதே போல், 21 கிலோ கொண்ட, கத்தரி பை, 400 ரூபாய்க்கு விற்று வந்தது. நேற்று, ஒரு பை, ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. மிளகாய், கிலோ, 20 முதல் 22 ரூபாய் வரை விற்று வந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X