காங்கிரஸ் கூட்டங்களில் ஆர்ப்பரிக்கும் டி.கே., - டி.கே., கோஷம்| Dinamalar

காங்கிரஸ் கூட்டங்களில் ஆர்ப்பரிக்கும் 'டி.கே., - டி.கே.,' கோஷம்

Added : நவ 17, 2021
Share
பெங்களூரு:"சமீப நாட்களாக, காங்கிரசின் அனைத்து நிகழ்ச்சிகளிலும், 'டி.கே., - டி.கே.,' என்ற கோஷம் ஆர்ப்பரிக்கிறது. எனவே, 'ஹவுது ஹுலியா' என, கூப்பாடு போடுவதற்கு, சித்தராமையாவும் ஒரு குழுவை ஏற்பாடு செய்வது நல்லது," என பா.ஜ., கிண்டலாக தெரிவித்துஉள்ளது.பெங்களூரு அரண்மனை மைதானத்தில், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சி, நடந்தது.கூட்டத்தில் எதிர்க்கட்சி

பெங்களூரு:"சமீப நாட்களாக, காங்கிரசின் அனைத்து நிகழ்ச்சிகளிலும், 'டி.கே., - டி.கே.,' என்ற கோஷம் ஆர்ப்பரிக்கிறது. எனவே, 'ஹவுது ஹுலியா' என, கூப்பாடு போடுவதற்கு, சித்தராமையாவும் ஒரு குழுவை ஏற்பாடு செய்வது நல்லது," என பா.ஜ., கிண்டலாக தெரிவித்துஉள்ளது.

பெங்களூரு அரண்மனை மைதானத்தில், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சி, நடந்தது.கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உரையாற்றும் போது, தொண்டர்கள் சிலர், 'டி.கே., - டி.கே.,' என, அவர் பெயரை உற்சாகமாக கோஷமிட்டனர். சிலர் ஜமிர் அகமது போட்டோவை பிடித்துக்கொண்டு கூச்சலிட்டனர். இதனால் கோபமடைந்த சித்தராமையா, உரையை பாதியில் நிறுத்திவிட்டு, மேடையிலிருந்து இறங்கினார். அதன்பின் மேடையேறிய சிவகுமார், தொண்டர்களின் நடவடிக்கையை கண்டித்தார்.

துரோகிகள்'

எதிர்க்கட்சி தலைவர் பேசும் போது, நீங்கள் கூச்சலிடுகிறீர்கள். நீங்கள் காங்கிரஸ் துரோகிகள்' என சாடினார்.அவரை தொடர்ந்து பேசிய, சாந்திநகர் எம்.எல்.ஏ., ஹாரிஸ், சிவகுமாரை புகழ்ந்து, ஜமீரை மறைமுகமாக விமர்சித்தார். சிறுபான்மையினர் தலைவர் பதவியேற்புக்கு, இச்சமுதாய தலைவர் இப்ராகிமே வரவில்லை. இது குறித்து அவரிடம், ஊடகத்தினர்

கேள்வியெழுப்பிய போது, 'அவர்கள் மிகப்பெரிய தலைவர்கள். அவர்களுடன் நான் சேருவது சரியில்லை. எனவே நிகழ்ச்சிக்கு நான் செல்லவில்லை' என கிண்டலாக கூறினார்.இது குறித்து, பா.ஜ., நேற்று கூறியதாவது:'ஹவுது ஹுலியா' சமீப நாட்களாக, காங்கிரசின் அனைத்து நிகழ்ச்சிகளிலும், 'டி.கே., - டி.கே.,' என்ற கோஷம் ஆர்ப்பரிக்கிறது.

எனவே, 'ஹவுது ஹுலியா' என, கூப்பாடு போடுவதற்கு, சித்தராமையாவும் ஒரு குழுவை வாடகைக்கு ஏற்பாடு செய்வது நல்லது.ஹிந்து தொண்டர்களின் படுகொலையை ஊக்கப் படுத்திய நீங்கள், திப்பு ஜெயந்தியை கொண்டாடினீர்கள். மேலும், ஷாதி பாக்யா திட்டத்தை கொடுத்தீர். ஆனால் பலன் என்ன... சிறுபான்மையினர் மாநாட்டில், உங்களுடன் சிறுபான்மை சமுதாயத்தினரே இருக்கவில்லை.

' காங்கிரசில் தனி நபரை பூஜிக்க வேண்டாம்; கட்சியை பூஜித்தால் போதும்,' என சிவகுமார், சித்தராமையாவை குறி வைத்து உத்தரவிட்டுள்ளார். சித்தராமையா உரையை துவங்கியதும், 'டி.கே., - டி.கே.,' என தொண்டர்கள் நபரை பூஜிக்கின்றனர். சித்தராமையா எப்படி சகிப்பார். காங்கிரஸ் உடைந்த வீடாக உள்ளது.முஸ்லிம் தலைவர்கள் ஒன்றாக இருக்க வேண்டுமென, காங்கிரசார் கூறுகின்றனர்.

ஆனால் தலைவருக்கு எதிராக பேசிய வழக்கில், முஸ்லிம் சமுதாயத்தின் சலீமை, கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து, உக்ரப்பாவுக்கு வெறும் 'நோட்டீஸ்' மட்டுமே அனுப்பினர். கர்நாடக காங்கிரசின், நரி புத்தியை சிறுபான்மையினர் யோசிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X