தமிழ்நாடு

மாற்றிடம் சென்ற மக்கள் வெறிச்சோடிய பழங்குடி கிராமம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
கூடலுார்: கூடலுார் அருகே, பழங்குடி கிராம மக்கள் மாற்றிடம் சென்றதால் தேன்வயல் கிராமம், வெறிச்சோடியது.கூடலுார் புத்துார் வயல் அருகே, ஆற்றை ஒட்டிய பகுதியில் தேன்வயல் பழங்குடி கிராமம் உள்ளது. இங்கு, 16 பழங்குடியின குடும்பங்கள், 50 ஆண்டுகளாக வசித்து வந்தனர். ஆண்டு தோறும் பருவமழை காலத்தில், கிராமத்தை மழை வெள்ளம் சூழ்வதும், அவர்களை வருவாய் துறையினர் மீட்டு, முகாமில் தங்க

கூடலுார்: கூடலுார் அருகே, பழங்குடி கிராம மக்கள் மாற்றிடம் சென்றதால் தேன்வயல் கிராமம், வெறிச்சோடியது.கூடலுார் புத்துார் வயல் அருகே, ஆற்றை ஒட்டிய பகுதியில் தேன்வயல் பழங்குடி கிராமம் உள்ளது. இங்கு, 16 பழங்குடியின குடும்பங்கள், 50 ஆண்டுகளாக வசித்து வந்தனர். ஆண்டு தோறும் பருவமழை காலத்தில், கிராமத்தை மழை வெள்ளம் சூழ்வதும், அவர்களை வருவாய் துறையினர் மீட்டு, முகாமில் தங்க வைப்பதும் வாடிக்கையாக இருந்தது.இதற்கு தீர்வு காணும் வகையில், முதுமலை தொரப்பள்ளி வருவாய் துறை சார்பில், ஒரு ஏக்கர் மாற்றிடம் வழங்கப்பட்டது. அங்கு, அரசு சார்பில், 16 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, சமீபத்தில் பழங்குடிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.இந்நிலையில், கடந்த, இரண்டு நாட்களுக்கு முன்பு, பழங்குடி மக்கள் தேன்வயல் கிராமத்தை காலி செய்து, புதிய வீடுகளில் குடிபுகுந்தனர். இதனால், பழங்குடிகளின் அடையாளமாக இருந்த தேன்வயல் கிராமம் வெறிச்சோடியது.கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவர் கூறுகையில், ''கடந்த, 50 ஆண்டுகள் வசித்த இடத்தை விட்டு வேறு இடத்துக்கு சென்றது கவலையாக இருந்தாலும், புதிய இடத்தில், மழை காலத்தில் மழை வெள்ளம் பாதிப்பின்றி நிம்மதியாக இருக்கலாம் என்பது மட்டும் ஆறுதல், எனினும், எங்கள் கிராமத்தை மறக்க முடியவில்லை,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X