செய்தி செய்தி

தமிழ்நாடு

அபாய மரங்கள் அகற்றும் பணி துவக்கம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
ஊட்டி: நீலகிரியில், சாலையோரங்களில், அபாயகரமான நிலையில் உள்ள மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது.நீலகிரியில், ஊட்டி - கூடலுார் சாலை; மஞ்சூர்--குன்னுார் சாலை; கோத்தகிரி, பந்தலுார் பர்லியார் சாலைகளில், நுாற்றாண்டு பழமை வாய்ந்த கற்பூரம், சீகை உள்ளிட்ட காட்டு மரங்கள் அதிகளவில் உள்ளன.பருவ மழையின் போது சாலையில் ஏற்படும் மண்சரிவால் மரங்கள் அனைத்தும் அபாயகரமான நிலையில் உள்ளன.

ஊட்டி: நீலகிரியில், சாலையோரங்களில், அபாயகரமான நிலையில் உள்ள மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது.நீலகிரியில், ஊட்டி - கூடலுார் சாலை; மஞ்சூர்--குன்னுார் சாலை; கோத்தகிரி, பந்தலுார் பர்லியார் சாலைகளில், நுாற்றாண்டு பழமை வாய்ந்த கற்பூரம், சீகை உள்ளிட்ட காட்டு மரங்கள் அதிகளவில் உள்ளன.பருவ மழையின் போது சாலையில் ஏற்படும் மண்சரிவால் மரங்கள் அனைத்தும் அபாயகரமான நிலையில் உள்ளன. சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.வடகிழக்கு பருவமழையின் தாக்கமாக, 'நீலகிரிக்கு அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது,' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தொடர்ந்து, அபாயகரமான மரங்கள் அகற்றுவது குறித்து, பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக, மஞ்சூர்- கிண்ணக்கொரை சாலை, ஊட்டி, கூடலுார், கோத்தகிரி, குன்னுார் உட்பட பல இடங்களில், சாலையோரங்களில் அபாயகரமான நிலையில் உள்ள மரங்கள் நெடுஞ்சாலை துறை சார்பில் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. தற்போது, சம்மந்தப்பட்ட துறை அனுமதியுடன், மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.


கடத்தப்படுவதாக புகார்...?

குன்னுார்: குன்னுார் பாரத்நகர், எடப்பள்ளி உட்பட பல்வேறு இடங்களிலும் அபாய மரங்கள் வெட்டப்படுகிறது. சில இடங்களில், வெட்டப்படும் மரங்கள் சில அதிகாரிகளின் உடந்தையுடன் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கூடுதல் கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி கூறுகையில், ''அந்தந்த அரசு துறைக்கு முறையாக அனுமதி அளித்து, அபாயகரமான மரங்கள் வெட்டப்படுகிறது. 20 மரங்களை தவிர, மற்ற மரங்களில் ஆபத்தான கிளைகள் மட்டுமே வெட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது. வெட்டிய அந்த மரதுண்டுகள் அந்தந்த துறைகள் ஏலம் விடப்பட வேண்டும். இதனை பயன்படுத்தி மரங்கள் கடத்தினால், வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X