தமிழ்நாடு

ஓட்டளிக்க 24 கி.மீ., செல்லும் அவலம்; தீர்வுக்கு காத்திருக்கும் கிராம மக்கள்

Added : நவ 17, 2021
Share
Advertisement
குன்னுார்: குன்னுார் ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட ஜெ.கொலக்கம்பை கிராமத்தில், 250 வாக்காளர்கள் உள்ளனர். இதுவரை நடந்த தேர்தல்களில், இப்பகுதி மக்கள், 24 கி.மீ., துாரம் சுற்றி ஜெகதளா வந்து ஓட்டளித்து சென்றுள்ளனர்.இந்நிலையில், வரும் உள்ளாட்சி தேர்தலுக்கு, ஜெகதளா அரசு பள்ளியில், இந்த கிராம மக்கள் ஓட்டுளிக்க 'பூத்' அமைக்கப்பட்டுள்ளதால் பழைய நிலை தொடரும் நிலை உள்ளது.கிராம

குன்னுார்: குன்னுார் ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட ஜெ.கொலக்கம்பை கிராமத்தில், 250 வாக்காளர்கள் உள்ளனர். இதுவரை நடந்த தேர்தல்களில், இப்பகுதி மக்கள், 24 கி.மீ., துாரம் சுற்றி ஜெகதளா வந்து ஓட்டளித்து சென்றுள்ளனர்.இந்நிலையில், வரும் உள்ளாட்சி தேர்தலுக்கு, ஜெகதளா அரசு பள்ளியில், இந்த கிராம மக்கள் ஓட்டுளிக்க 'பூத்' அமைக்கப்பட்டுள்ளதால் பழைய நிலை தொடரும் நிலை உள்ளது.கிராம பிரமுகர் குணசேகரன் கூறுகையில்,''ஜெ.கொலக்கம்பை கிராம மக்கள், அரக்காடு, எல்லநள்ளி வழியாக, 24 கி.மீ., சுற்றி ஜெகதளா வந்து ஓட்டளிக்க சிரமம் உள்ளதால், 5 சதவீதம் மக்கள் கூட ஓட்டளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே நடந்த தேர்தலின் போது, ஓட்டளிக்க, அரசு பஸ் வசதி ஏற்பாடு செய்வதாக தெரிவித்து, பஸ் இயக்கவில்லை. இதனால், கிராமத்தில் இருந்து வேன் மூலம் ஒட்டளிக்க வந்த போது, பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. இது போன்ற சூழ்நிலை ஏற்படாத வகையில், நடவடிக்கை எடுக்க, மாநில தேர்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X