துளிகள் செய்தி

தமிழ்நாடு

சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
கருமத்தம்பட்டி: கணபதிபாளையம் சித்தி விநாயகர், சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.கருமத்தம்பட்டி அடுத்த எம்.கணபதிபாளையத்தில் உள்ள சித்தி விநாயகர் மற்றும் சக்தி மாரியம்மன் கோவில் பழமையானது. விநாயகருக்கு புதிய ஆலயம் நிர்மாணிக்கும் பணியும், சக்தி மாரியம்மன் கோவிலில் திருப்பணிகளும் நடந்தன. கடந்த, 13ம் தேதி காலை, 4:30 மணிக்கு,



கருமத்தம்பட்டி: கணபதிபாளையம் சித்தி விநாயகர், சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.கருமத்தம்பட்டி அடுத்த எம்.கணபதிபாளையத்தில் உள்ள சித்தி விநாயகர் மற்றும் சக்தி மாரியம்மன் கோவில் பழமையானது.
விநாயகருக்கு புதிய ஆலயம் நிர்மாணிக்கும் பணியும், சக்தி மாரியம்மன் கோவிலில் திருப்பணிகளும் நடந்தன. கடந்த, 13ம் தேதி காலை, 4:30 மணிக்கு, விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. மாலை முதல் கால ஹோமம், தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, இரண்டாம், மூன்றாம், நான்காம் கால பூஜைகள் முடிவுற்று பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசங்கள், மேள, தாளத்துடன் கோவிலை வலம் வந்தன. கடந்த, 15ம் தேதி காலை, 7:00 மணிக்கு, விமானங்கள் மற்றும் சித்தி விநாயகர் மற்றும் சக்தி மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தச தானம், தச தரிசனம், அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தன. நிறைவில், பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X