தமிழ்நாடு

கொரோனா தடுப்பில் அலட்சியம்! தலைதூக்கும் பரவலுக்கு முற்றுப்புள்ளி தேவை

Added : நவ 17, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்: கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், பொது மக்கள் அலட்சியமாக இருப்பதை தவிர்த்து நோய் பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்விடுக்கின்றனர்.கோவை மாவட்டத்தில், கடந்த மே மாதம் தினமும், 4,500 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தமிழகத்தில், தினசரி பாதிப்பு அளவில், கோவை முதலிடம் பிடித்தது. நோயை கட்டுப்படுத்த சிறப்பு முகாம்கள்
கொரோனா தடுப்பில் அலட்சியம்! தலைதூக்கும் பரவலுக்கு முற்றுப்புள்ளி தேவை

பெ.நா.பாளையம்: கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், பொது மக்கள் அலட்சியமாக இருப்பதை தவிர்த்து நோய் பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்விடுக்கின்றனர்.கோவை மாவட்டத்தில், கடந்த மே மாதம் தினமும், 4,500 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தமிழகத்தில், தினசரி பாதிப்பு அளவில், கோவை முதலிடம் பிடித்தது. நோயை கட்டுப்படுத்த சிறப்பு முகாம்கள் வாயிலாக, தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டதால், பாதிப்பு படிப்படியாக குறைந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக குறிப்பாக, தீபாவளிக்கு பிறகு தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.கடந்த, 9ம் தேதி, 98 பேருக்கும், 10ல், 107, 11ல், 109, 12ல், 108, 13ல், 134 பேருக்கும் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, தமிழக அளவில் கோவை மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்திற்கு உட்பட்ட, 9 ஊராட்சிகள், நான்கு பேரூராட்சி பகுதிகளில் தினமும் இரண்டு அல்லது மூன்று என்பது, தற்போது, 5 அல்லது, 6 ஆக பாதிப்பு உயர்ந்துள்ளது. நோய் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும், மக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே நோய் பரவலுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.பெரியநாயக்கன்பாளையம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வடிவேல் கூறியதாவது:தொற்று குறைந்ததால், மாஸ்க், சமூக இடைவெளி, அடிக்கடி கை கழுவுதல் உள்ளிட்ட நோய் தடுப்பு விஷயங்களில் மக்களிடம் அலட்சியம் காணப்படுகிறது. நரசிம்மநாயக்கன்பாளையம் ராஜேந்திரா நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒன்பது பேருக்கு தொற்று உறுதியானதால், அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் இதுவரை, ஒரு லட்சத்து, 70 ஆயிரம் பேருக்கு முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தவிர, வீடு, வீடாக சென்றும் செலுத்தப்படுகிறது. ஞாயிறு தோறும் நடக்கும் மெகா தடுப்பூசி முகாம்களிலும் முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், 15 ஆயிரம் பேர், முதல் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் முகாம்களில் தவறாது தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். நோயை கட்டுப்படுத்த, பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் சுகாதார பணியாளர்கள் வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.இதற்கென, ஐந்து மொபைல் வேன்களில், தலா ஒரு மருத்துவர், இரு செவிலியர், ஒரு உதவியாளர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மழைகாலத்தில், டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க, தொட்டிகளில் 'அபேட்' மருந்து தெளிப்பதுடன், துண்டு பிரசுரங்கள் வழங்கி மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X