துளிகள் செய்தி

தமிழ்நாடு

காதொலி கருவி வழங்கி மாணவர்களுக்கு உதவி

Added : நவ 17, 2021
Share
Advertisement
அன்னுார்: ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்கள், 19 பேருக்கு வீல் சேர், நாற்காலி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு, இலவசமாக சிறப்பு உபகரணங்கள் வழங்கப்படுகிறது. இதன்படி, அன்னுார் வட்டார வள மையத்தில் உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வட்டார வளமைய பொறுப்பாசிரியர் ஜெயஸ்ரீ,

அன்னுார்: ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்கள், 19 பேருக்கு வீல் சேர், நாற்காலி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு, இலவசமாக சிறப்பு உபகரணங்கள் வழங்கப்படுகிறது. இதன்படி, அன்னுார் வட்டார வள மையத்தில் உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வட்டார வளமைய பொறுப்பாசிரியர் ஜெயஸ்ரீ, வட்டார கல்வி அலுவலர் ரங்கராஜ் ஆகியோர், 19 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு, வீல் சேர், நாற்காலி, காதொலி கருவி, எம்.ஆர்., உபகரணம் உள்ளிட்டவைகளை வழங்கினர்.மேலும், ஆசிரிய பயிற்றுனர்கள் மற்றும் சிறப்பு பயிற்றுனர்கள், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X