தமிழ்நாடு

உச்சம் தொட்டு வரும் நுால் விலை

Added : நவ 17, 2021
Share
Advertisement
சோமனுார்: உச்சத்தை தொட்டு வரும் நுால் விலையால் அச்சம் அடைந்துள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் துணிக்கு விலை கிடைத்தால் மட்டுமே விசைத்தறிகளை இயக்க முடிவு செய்துள்ளனர்.கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய, பெரிய ஸ்பின்னிங் மில்கள் மற்றும் ஓ.இ., மில்கள் இயங்குகின்றன. இதேபோல், லட்சக்கணக்கான விசைத்தறிகளும் இயங்குகின்றன. மில்களில் உற்பத்தியாகும்

சோமனுார்: உச்சத்தை தொட்டு வரும் நுால் விலையால் அச்சம் அடைந்துள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் துணிக்கு விலை கிடைத்தால் மட்டுமே விசைத்தறிகளை இயக்க முடிவு செய்துள்ளனர்.கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய, பெரிய ஸ்பின்னிங் மில்கள் மற்றும் ஓ.இ., மில்கள் இயங்குகின்றன. இதேபோல், லட்சக்கணக்கான விசைத்தறிகளும் இயங்குகின்றன. மில்களில் உற்பத்தியாகும் நுால் ரகங்களை கொண்டு, விசைத்தறிகளில், காடாத்துணி ரகங்கள் நெய்யப்படுகின்றன.கடந்த ஒரு மாதமாக நுால் விலை தொடர்ந்து, உயர்ந்து வருவதால், ஜவுளி உற்பத்தியாளர்கள் அச்சமடைந்துள்ளனர். நுால் விலையேற்றத்துக்கு ஏற்ப துணிக்கு விலை கிடைக்காததால் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். ஒரு கிலோவுக்கு, 25 முதல், 28 ரூபாய் வரை நுால் விலை உயர்ந்தது. இதனால், ஜவுளி உற்பத்தியாளர்கள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறியதாவது:பஞ்சு விலை வரலாறு காணாத வகையில் உச்சத்தில் இருந்தது. கடந்த வாரங்களில் ஏறுமுகத்தில் இருந்த பஞ்சு விலை சிறிது குறைந்துள்ளது. ஆனாலும், பஞ்சு விலைக்கு ஏற்ப நுால் விலை இல்லாமல், அதைவிட மிக அதிகமாக உயர்ந்துள்ளது கவலை அளிக்கிறது. தீபாவளி வரை விசைத்தறிகளை இயக்க வேண்டிய கட்டாயத்தில், அதிக விலை கொடுத்து நுால் ரகங்களை வாங்கினோம்.பண்டிகையை ஒட்டி, விசைத்தறிகள் இயங்கவில்லை. இனி, வரும், 20ம் தேதிக்கு பிறகுதான் பாவு நுால் கொடுக்க முடிவு செய்துள்ளோம். நுால் விலை குறைந்தால் மட்டுமே முழுமையாக பாவு நுால் கொடுக்க முடிவு செய்துள்ளோம். அதுவரை தறிகள் நின்றாலும் பரவாயில்லை. நஷ்டத்துக்கு தொழில் செய்ய முடியாது. ஏற்கனவே பல முறை நுால் விலை உயர்ந்த போது, துணிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் நஷ்டத்தில் சிக்கி தவித்துள்ளோம்.எனவே, அந்த நாட்களை மறக்க முடியாது. நுால் விலைக்கேற்ப துணிக்கு விலை கிடைத்தால் மட்டுமே மீண்டும் விசைத்தறிகளை இயக்க முடிவு செய்துள்ளோம். அதுவரை வர்த்தக விசாரணை கூட செய்வதில்லை என்ற முடிவில் உள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X