சேலை உற்பத்தி நிறுத்தம்!

Added : நவ 17, 2021
Share
Advertisement
நுால் விலை உயர்வால், 15 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்த, சோமனுார் வட்டார சேலை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.சோமனுார் வட்டார சேலை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் அழகிரிசாமி, செயலாளர் கல்பனா பாலு ஆகியோரது அறிக்கை:கடுமையான நுால் விலை உயர்வால், நாங்கள் உற்பத்தி செய்யும் சேலை ரகங்களுக்கு உரிய விலை கிடைப்பது இல்லை. அதனால், சோமனுார், சாமளாபுரம்,

நுால் விலை உயர்வால், 15 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்த, சோமனுார் வட்டார சேலை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.சோமனுார் வட்டார சேலை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் அழகிரிசாமி, செயலாளர் கல்பனா பாலு ஆகியோரது அறிக்கை:கடுமையான நுால் விலை உயர்வால், நாங்கள் உற்பத்தி செய்யும் சேலை ரகங்களுக்கு உரிய விலை கிடைப்பது இல்லை. அதனால், சோமனுார், சாமளாபுரம், கருமத்தம்பட்டி, வாகராயம்பாளையம், கண்ணம்பாளையம் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும், சுமார், 6,000க்கும் மேற்பட்ட விசைத்தறிகளை, டிச., 2 வரை, 15 நாட்கள் இயக்குவதில்லை என முடிவு செய்துள்ளோம். மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, பஞ்சு மற்றும் நுால் பதுக்கலை தடுக்க வேண்டும். வரலாறு காணாத விலை உயர்வை கட்டுப்படுத்தி, சீரான விலையில் விற்கும் நடைமுறையை கொண்டுவர வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X