தவியாய் தவிக்கும் அன்னுார் மக்கள்| Dinamalar

தவியாய் தவிக்கும் அன்னுார் மக்கள்

Added : நவ 17, 2021
Share
அன்னுார்: அன்னுார் பேரூராட்சியில், 15 வார்டுகளில், 26 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கு, 6,500-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக குடிநீர் இணைப்புகள் உள்ளன. மேட்டுப்பாளையம், பவானி ஆற்றில் இருந்து இரண்டு குடிநீர் திட்டங்கள் வாயிலாக குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக குடிநீர் சப்ளை வெகுவாக குறைந்து விட்டது.அன்னுார் மக்கள் கூறியதாவது:அன்னுார் நகரில், 13

அன்னுார்: அன்னுார் பேரூராட்சியில், 15 வார்டுகளில், 26 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கு, 6,500-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக குடிநீர் இணைப்புகள் உள்ளன. மேட்டுப்பாளையம், பவானி ஆற்றில் இருந்து இரண்டு குடிநீர் திட்டங்கள் வாயிலாக குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக குடிநீர் சப்ளை வெகுவாக குறைந்து விட்டது.அன்னுார் மக்கள் கூறியதாவது:அன்னுார் நகரில், 13 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அதுவும் இரண்டு மணி நேரம் மட்டுமே குடிநீர் வருகிறது. இந்த குடிநீரை ஐந்து நாட்களுக்கு மேல் வைத்து பயன்படுத்தினால் புழு உருவாகிறது. இதனால், 20 லிட்டர் கேன், 40 ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்துகிறோம். பொது குடிநீர் குழாய்கள் குறைவாக இருப்பதால், நீண்டநேரம் காத்திருந்து தண்ணீர் பிடிக்க வேண்டியுள்ளது.பேரூராட்சி அலுவலகத்தில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. புதிதாக அன்னுார், அவிநாசி, மோப்பிரிபாளையம் பேரூராட்சி கூட்டு குடிநீர் திட்டத்தில், பற்றாக்குறை சரி செய்யப்படும் என ஓராண்டாக கூறி வருகின்றனர். திட்டம் நிறைவேறாது இழுபறியாக இருப்பதால், இன்னும் குடிநீர் சப்ளை இல்லை. நான்கு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மக்கள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X