செய்தி செய்தி

தமிழ்நாடு

ஊசி, பாசி மணி மாலைகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை: நரிக்குறவர் சமூகத்தினர் கவலை

Added : நவ 17, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்: மூலப்பொருட்கள் விலை இரு மடங்கு உயர்ந்துள்ள நிலையில், ஊசி, பாசி மணி மாலைகளுக்கு உரிய விலை கிடைக்காது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக நரிக்குறவர் சமூகத்தினர் புலம்புகின்றனர்.காரமடை அடுத்த எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள நரிக்குறவர் காலனியில், 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. காலங்காலமாக இவர்கள் ஊசி, பாசி மணி மாலைகள் விற்பனை செய்துவந்தனர்.



மேட்டுப்பாளையம்: மூலப்பொருட்கள் விலை இரு மடங்கு உயர்ந்துள்ள நிலையில், ஊசி, பாசி மணி மாலைகளுக்கு உரிய விலை கிடைக்காது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக நரிக்குறவர் சமூகத்தினர் புலம்புகின்றனர்.காரமடை அடுத்த எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள நரிக்குறவர் காலனியில், 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. காலங்காலமாக இவர்கள் ஊசி, பாசி மணி மாலைகள் விற்பனை செய்துவந்தனர். மூலபொருட்களின் விலை உயர்வால், 'பேன்சி' பொருட்கள், பட்டை கிராம்பு விற்பனை தொழிலுக்கு பலர் மாறிவிட்டனர். தற்போது, 100 குடும்பத்தினர் மட்டுமே ஊசி, பாசி மணி மாலைகள் தயாரித்து வருகின்றனர். இச்சூழலில், மூலப்பொருட்களின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளதால், பெரும் நஷ்டத்தை சந்திப்பதாக இச்சமூகத்தினர் புலம்புகின்றனர்.எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த நரிக்குறவர் சந்திரன் கூறியதாவது:மணி மாலைகள் உற்பத்தி செய்வதை, குடிசை தொழிலாக செய்கிறோம். மாலைகளுக்கு தேவையான துளசிமணி, ருத்ராட்சம், சந்தன மாலை, ரத்த சந்தனம், ஸ்படிகம் கருப்பு, ஈச்சமணி, பவளம் ஆகிய மூலப்பொருட்களை, டில்லி, ஆக்ரா, மதுரா, நேபாளம், இமாச்சலம், தமிழ்நாட்டில் கீழக்கரை ஆகிய பகுதிகளுக்குச் சென்று வாங்கி வருகிறோம். இரு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு கிலோ காப்பர் கம்பி, 650 ரூபாய்க்கு விற்பனையானது.தற்போது, இரு மடங்காக உயர்ந்து, 1,450க்கு விற்கிறது. கொரோனா பிரச்னையால், ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல முடியாத நிலை இருந்தது. இதனால், ஒவ்வொரு வீடுகளிலும் குறைந்தபட்சம், 50 ஆயிரம் முதல், 1.5 லட்சம் ரூபாய்க்கு உற்பத்தி செய்த மாலைகள் தேக்கம் அடைந்துள்ளன.வெளிநாடுகள் சென்று பலர் மாலைகள் விற்று வந்தனர். கொரோனாவால் அதுவும் தடைபட்டது. தற்போது, கேரளாவில் ஐயப்பன் கோவில் திறக்கப்பட்டதால், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் துளசி மணி மாலைகளை வாங்குகின்றனர். ஒரு மாலை உற்பத்தி செய்து முடிக்க மூலப்பொருட்களின் அடக்க விலை, 15 ரூபாய் ஆகிறது. ஆனால், விலை குறைத்து கேட்கும்போது, உற்பத்தி விலை கூட கிடைப்பதில்லை. கடன் பெற்று மூலப் பொருட்கள் வாங்கியதால், அந்த கடனை திருப்பி அடைக்க முடியாமல் திணறுகிறோம். சிறுதொழில் செய்யும் எங்களுக்கு, தமிழக அரசு மானியக் கடன் வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X