எப்போது குறுமைய விளையாட்டு போட்டி?

Added : நவ 17, 2021
Share
Advertisement
கோவை: ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகளை உடனடியாக நடத்த வேண்டுமென, பள்ளி மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆண்டுதோறும் பள்ளி கல்வித்துறை சார்பில், விளையாட்டு மற்றும் கலாசார போட்டிகள் நடத்தப்படும். முதலில் குறுமைய அளவிலான போட்டிகள் நடத்தப்படும். இதில், முதலிடம் பிடிக்கும் அணிகள் மண்டல அளவிலான போட்டிக்கு



கோவை: ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகளை உடனடியாக நடத்த வேண்டுமென, பள்ளி மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆண்டுதோறும் பள்ளி கல்வித்துறை சார்பில், விளையாட்டு மற்றும் கலாசார போட்டிகள் நடத்தப்படும். முதலில் குறுமைய அளவிலான போட்டிகள் நடத்தப்படும். இதில், முதலிடம் பிடிக்கும் அணிகள் மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர். மண்டல போட்டியில் வெற்றி பெறும் அணியினர், மாநில போட்டியில் பங்கேற்கின்றனர். கோவை மாவட்டத்தில் கோவை- 'அ', 'ஆ', கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மேட்டுப்பாளையம், சூலுார் என, எட்டு குறுமையங்கள் உள்ளன.
இதில், 14, 17 மற்றும் 19 வயது பிரிவு மாணவ, மாணவிகளுக்கான கபடி, கோ- கோ, வாலிபால், கால்பந்து, இறகுப்பந்து, த்ரோபால் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படும். கொரோனா பரவல் காரணமாக, ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டதால், குறுமைய போட்டிகள் நடத்தப்படவில்லை. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டும் போட்டிகள் நடத்தப்படாததால், விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்கள், ஏமாற்றம் அடைந்துள்ளனர். மாநில போட்டிகளில் சாதனை படைக்க நினைக்கும் மாணவர்களுக்கு, குறுமைய போட்டிகள் அடித்தளமாக இருப்பதால், குறுமைய போட்டிகள் நடத்த அரசு முன் வர வேண்டுமென, எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இது குறித்து விளையாட்டு வீரர்கள் கூறுகையில், 'கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், குறுமைய போட்டிகள் நடத்த வேண்டும். மாநில போட்டிகளில் வெற்றி பெற்ற சான்றிதழ் அடிப்படையில்தான், 'ஸ்போர்ட்ஸ் கோட்டா' முறையில் உயர்கல்வியை தொடர முடியும்' என்றனர்.கொரோனா பரவல் காரணமாக, ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டதால், குறுமைய போட்டிகள் நடத்தப்படவில்லை. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டும் போட்டிகள் நடத்தப்படாததால், விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்கள், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X