தமிழ்நாடு

கொரோனாவுடன் பன்றி காய்ச்சலுக்கும் 'டெஸ்ட்': கட்டாயம் எடுக்க மருத்துவர்கள் 'அட்வைஸ்'

Added : நவ 17, 2021
Share
Advertisement
கோவை: கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வரும் மக்கள், கூடவே பன்றி காய்ச்சலுக்கான பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டுமென, மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.கோவை மாவட்டத்தில் டெங்கு, பன்றி காய்ச்சல் (எச்1என்1) நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. கோவை மாநகராட்சி பகுதியில், பன்றி காய்ச்சலுக்கு இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட நபரின் வீட்டிற்கு அருகில் வசிக்கும், 13



கோவை: கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வரும் மக்கள், கூடவே பன்றி காய்ச்சலுக்கான பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டுமென, மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.கோவை மாவட்டத்தில் டெங்கு, பன்றி காய்ச்சல் (எச்1என்1) நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. கோவை மாநகராட்சி பகுதியில், பன்றி காய்ச்சலுக்கு இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட நபரின் வீட்டிற்கு அருகில் வசிக்கும், 13 பேரிடம்எச்1என்1 சளி மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது.இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு சார்பில், பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள், நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பன்றி காய்ச்சல் அறிகுறிகளான மூக்கு எரிச்சல், சளி, காய்ச்சல், தொண்டை வலி, தலைவலி இருந்தால், சுயமாக மாத்திரை உட்கொள்ளாமல், மருத்துவர்களை அணுக வேண்டும் என, சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.இது குறித்து, அரசு மருத்துவமனையின் பொது மருத்துவ துறைத்தலைவர் சுவாமிநாதன் கூறுகையில், ''காய்ச்சல் அறிகுறி இருந்தால் முதலில் மருத்துவர்களை பார்க்க வேண்டும். சாதாரண காய்ச்சல் என நினைத்து விட்டு விட்டால், எச்1என்1 வைரஸ் பாதிப்பு ஏற்படும். பின்னர், நிமோனியா மற்றும் சுவாச பை கோளாறு (ஏ.ஆர்.டி.எஸ்) வரை சென்று விடும். பன்றி காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்களுக்கு, 'டேமிப்ளூ' மாத்திரை வழங்கப்படும். கொதிக்க வைத்த நீர், ஊட்டச்சத்து மிகுந்த உணவு உட்கொள்ள வேண்டும். கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வரும் மக்கள், கூடவே பன்றி காய்ச்சலுக்கான பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X