தமிழ்நாடு

பள்ளி முதல்வர் ஜாமின் மனு வரும் 20ல் விசாரணை

Added : நவ 17, 2021
Share
Advertisement
கோவை: கோவை மாணவி தற்கொலை செய்த வழக்கில், கைதான பள்ளி முதல்வர் ஜாமின் மனு வரும் 20ல் விசாரணைக்கு வருகிறது.கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த, பிளஸ் 2 மாணவி, கடந்த 12ல் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஆர்.எஸ்.புரத்திலுள்ள தனியார் பள்ளி இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி, 35, பாலியல் தொல்லை கொடுத்ததால் தற்கொலை செய்தது விசாரணையில் தெரிந்தது. போக்சோ சட்டத்தில் அவரை

கோவை: கோவை மாணவி தற்கொலை செய்த வழக்கில், கைதான பள்ளி முதல்வர் ஜாமின் மனு வரும் 20ல் விசாரணைக்கு வருகிறது.கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த, பிளஸ் 2 மாணவி, கடந்த 12ல் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஆர்.எஸ்.புரத்திலுள்ள தனியார் பள்ளி இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி, 35, பாலியல் தொல்லை கொடுத்ததால் தற்கொலை செய்தது விசாரணையில் தெரிந்தது. போக்சோ சட்டத்தில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மாணவி பல முறை புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனையும், 46, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.முதல்வர் மீரா ஜாக்சனை ஜாமினில் விடுவிக்க கோரி, கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீது வரும் 20ல் விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X