செய்தி செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பட்டியலை வார்டுக்கு 100 பிரதி தயாராக வைக்க உத்தரவு

Added : நவ 17, 2021
Share
Advertisement
கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தயார் செய்யப்படும் வார்டு வாரியான வாக்காளர் பட்டியலை, தலா 100 பிரதிகள் அச்சிட்டு வைக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சி, 3 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளுக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த உள்ளாட்சிகளில் அமைந்துள்ள 703 வார்டுகளுக்கான வாக்காளர் பட்டியல் தயாராகி விட்டது.அவற்றை இந்திய தேர்தல்

கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தயார் செய்யப்படும் வார்டு வாரியான வாக்காளர் பட்டியலை, தலா 100 பிரதிகள் அச்சிட்டு வைக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சி, 3 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளுக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த உள்ளாட்சிகளில் அமைந்துள்ள 703 வார்டுகளுக்கான வாக்காளர் பட்டியல் தயாராகி விட்டது.
அவற்றை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட, வரைவு வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிட்டு சரி பார்க்கும் பணியில் தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.வாக்காளர் பட்டியல் 25ம் தேதி அரசியல் கட்சியினருக்கு வழங்கப்பட வேண்டும். அதற்கு முதல் நாளே அச்சிட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும் என ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.தேர்தல் நடக்கும் ஒவ்வொரு வார்டுக்கான வாக்காளர் பட்டியலும், தலா 100 பிரதிகள் அச்சிடப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்கு 8 பிரதி, அரசியல் கட்சிகளுக்கு விற்பனை செய்வதற்கு 25 பிரதி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு இலவசமாக வழங்குவதற்காக 22 பிரதி, வேட்பாளர்களுக்கு விற்பனை செய்ய 15 பிரதி, ஓட்டுச்சாவடிக்கு வினியோகம் செய்ய 16 பிரதி, மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு ஒரு பிரதி என வாக்காளர் பட்டியல் வழங்கப்பட உள்ளது.தேர்தல் பதிவு அதிகாரியின் ஆவண பதிவுக்காக 5 பிரதி, மாநில தேர்தல் ஆணையத்துக்கு ஒரு பிரதி, மாநில தேர்தல் அதிகாரிக்கு 2 பிரதி, வாக்காளர் பட்டியல் வெளியீட்டுக்காக 5 பிரதிகள் என, 100 பிரதிகள் கணக்கிட்டு அச்சிட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X