தமிழ்நாடு

தற்கொலை செய்த பள்ளி மாணவியின் படத்தை வெளியிட்டவர்கள் மீது வழக்கு

Added : நவ 17, 2021
Share
Advertisement
கோவை: கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், சுயவிவரங்களை வெளியிடும் வகையில் பேனர் வைத்தவர்கள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கோவையில், 17 வயது மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இதன் காரணமாக, பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி,35 முதல்வர் மீரா ஜாக்சன் (எ) மினி ஜாக்சன் ஆகியோர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த

கோவை: கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், சுயவிவரங்களை வெளியிடும் வகையில் பேனர் வைத்தவர்கள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கோவையில், 17 வயது மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இதன் காரணமாக, பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி,35 முதல்வர் மீரா ஜாக்சன் (எ) மினி ஜாக்சன் ஆகியோர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு வேறு யாரேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.இந்நிலையில், மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு, பல்வேறு தரப்பினரும், போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்.எஸ்.புரம்.,உக்கடம், ஈஸ்வரன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு, பேனர் வைக்கப்பட்டது.பேனர்களில் மாணவியின் படம் உட்பட சுய விபரங்களை வெளியிட்டதற்காக, சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.போலீசார் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில், 'போக்சோ சட்டப்படி, பாதிக்கப்பட்ட குழந்தையின் பெயர், முகவரி, புகைப்படம், குடும்ப விபரங்கள், பள்ளி, சுற்றுப்புறம் அல்லது குழந்தையின் அடையாளத்தை வெளிப்படுத்த வழிவகுக்கும் விபரங்களை, எந்த ஊடகத்திலும் வெளியிடக்கூடாது. அப்படி யாரேனும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தால், உடனடியாக நீக்கி விட வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X