பொது மைதானம் ஆக்கிரமிப்பு அன்னூர் தாசில்தார் விசிட்| Dinamalar

செய்தி செய்தி

தமிழ்நாடு

பொது மைதானம் ஆக்கிரமிப்பு அன்னூர் தாசில்தார் 'விசிட்'

Added : நவ 17, 2021
Share
அன்னுார்: பொன்னேகவுண்டன்புதுாரில், பொது மைதானம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்ததை அடுத்து தாசில்தார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.பொன்னேகவுண்டன்புதூர் பொது மக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கப்பட்ட மனு:மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சி, பொன்னேகவுண்டன் புதுாரில், நான்குரோடு சந்திப்பில், பொது மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் வார சந்தை நடந்து

அன்னுார்: பொன்னேகவுண்டன்புதுாரில், பொது மைதானம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்ததை அடுத்து தாசில்தார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.பொன்னேகவுண்டன்புதூர் பொது மக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கப்பட்ட மனு:மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சி, பொன்னேகவுண்டன் புதுாரில், நான்குரோடு சந்திப்பில், பொது மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் வார சந்தை நடந்து வருகிறது. இத்துடன் குழந்தைகள் விழாக்கள், ஊர் மக்கள் நடத்தும் பொது விழாக்கள் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.
அரசியல் கட்சியின் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், விழிப்புணர்வு இயக்கம் இங்கு நடந்து வருகிறது.கனரக வாகனங்கள், ஆட்டோக்கள் இந்த மைதானத்தை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள கோவில் நிர்வாகம் பொது மைதானத்தை ஆக்கிரமிக்கும் நோக்கோடு சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை துவக்கியுள்ளனர். எனவே, சட்டத்துக்கு புறம்பான சுற்றுச்சுவர் கட்டும் பணியை உடனடியாக தடுத்து, ஆக்கிரமிப்பு ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, அன்னுார் தாசில்தார் சிவக்குமார், தெற்கு வருவாய் ஆய்வாளர் சங்கர்லால் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து, விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X