சாலையில் பெருக்கெடுக்கும் கழிவுநீர்: அபிஷேகத்தால் பாதசாரிகள் அவதி| Dinamalar

சாலையில் பெருக்கெடுக்கும் கழிவுநீர்: 'அபிஷேகத்தால்' பாதசாரிகள் அவதி

Added : நவ 17, 2021
Share
அன்னுார்: குமாரபாளையத்தில், சாலையின் நடுவே செல்லும் கழிவுநீரால் மக்கள் அவதிப்படுகின்றனர்.அன்னுார் நகரில், அத்திக்கடவு திட்டம், பேரூராட்சி கூட்டுக் குடிநீர் திட்டம், கிராம கூட்டு குடிநீர் திட்டம் என மூன்று திட்டங்களில் குழாய்கள் பதிக்கப்பட்டன. இந்நிலையில், அன்னுாரில் இருந்து குமாரபாளையம் செல்லும் சாலையில், குழாய் பதித்த குழியின் மேற்பரப்பில், கழிவுநீர் செல்ல வழி

அன்னுார்: குமாரபாளையத்தில், சாலையின் நடுவே செல்லும் கழிவுநீரால் மக்கள் அவதிப்படுகின்றனர்.அன்னுார் நகரில், அத்திக்கடவு திட்டம், பேரூராட்சி கூட்டுக் குடிநீர் திட்டம், கிராம கூட்டு குடிநீர் திட்டம் என மூன்று திட்டங்களில் குழாய்கள் பதிக்கப்பட்டன. இந்நிலையில், அன்னுாரில் இருந்து குமாரபாளையம் செல்லும் சாலையில், குழாய் பதித்த குழியின் மேற்பரப்பில், கழிவுநீர் செல்ல வழி செய்யப்படவில்லை. இதனால் சாலையின் நடுவே, கழிவுநீர் பெருக்கெடுத்து செல்கிறது.பள்ளமான இடங்களில் கழிவுநீர் தேங்கி குளம்போல் நிற்பதால், சாலை அரிக்கப்பட்டும் வருகிறது. கழிவுநீர் குளத்தால் துர்நாற்றமும், சுகாதார கேடும் ஏற்படுகிறது. வாகனங்கள் செல்லும்போது சாலையோரத்தில் நடப்போர் மீது கழிவு நீர் அபிஷேகம் நடக்கிறது.
இதுகுறித்து அன்னுார் பேரூராட்சியிலும், நெடுஞ்சாலை துறை அலுவலகத்திலும் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. விரைவில் கழிவுநீர் சாலையோரத்தில் இடையூறு இல்லாமல் செல்ல பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குமாரபாளையம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X