செய்தி செய்தி

தமிழ்நாடு

மின் இணைப்பு தராமல் இழுத்தடிப்பு: நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி

Added : நவ 17, 2021
Share
Advertisement
அன்னுார்: மின் இணைப்பை மாற்றித்தராமல் இழுத்தடிப்பதாக பேரூராட்சி மற்றும் மின் வாரியம் மீது அன்னுார் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.அன்னுார் பேரூராட்சியில், 50க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இவை கட்டுமான பணி துவங்கும்போது, தற்காலிக மின் இணைப்பு பெற்று மின்சாரத்தை பயன்படுத்தினர். கட்டுமான பணி முடிந்து கட்டடங்கள் திறக்கப்பட்ட

அன்னுார்: மின் இணைப்பை மாற்றித்தராமல் இழுத்தடிப்பதாக பேரூராட்சி மற்றும் மின் வாரியம் மீது அன்னுார் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.அன்னுார் பேரூராட்சியில், 50க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இவை கட்டுமான பணி துவங்கும்போது, தற்காலிக மின் இணைப்பு பெற்று மின்சாரத்தை பயன்படுத்தினர். கட்டுமான பணி முடிந்து கட்டடங்கள் திறக்கப்பட்ட பிறகு தற்காலிக மின் இணைப்பை, வணிக மின் இணைப்பாக மாற்றித்தரும்படி உரிய ஆவணங்களுடன் மின் வாரியத்திற்கு விண்ணப்பித்தனர். ஆனால், மின்வாரியம் வணிக இணைப்பாக மாற்றாமல் இழுத்தடிப்பதாக புகார் எழுந்துள்ளது.மின் இணைப்பு விண்ணப்பதாரர்கள் கூறியதாவது:தற்காலிக மின் இணைப்பில் ஒரு யூனிட் கட்டணம்,11 ரூபாயாக செலுத்திவருகிறோம். வணிக இணைப்பாக மாற்றப்பட்டால் யூனிட்டுக்கு வெறும், 5 ரூபாய் செலுத்தினால் போதும். மின்வாரியத்தில் விண்ணப்பித்தபோது, கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு விட்டது என்ற சான்றிதழை பேரூராட்சி அலுவலகத்தில் பெற்று வரும்படி கூறினர். இதற்கான சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால் பேரூராட்சி தர மறுக்கிறது.கேட்டால், மின் வாரியத்தினர் வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். மின் வாரியத்திடம் தெரிவித்தால் பேரூராட்சி நிர்வாகத்தினர்தான் வழக்கு தொடர்ந்ததாக கூறுகின்றனர். இரு துறைகளின் மோதல் காரணமாக ஆறு மாதங்களுக்கு மேலாக அன்னுார் பேரூராட்சியில், 20க்கும் மேற்பட்டோர் மின் இணைப்பு மாற்றம் செய்ய முடியாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.நடவடிக்கை!புகார் குறித்து மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கேட்டபோது, "உங்களுடைய புகார் புதிய தகவலாக இருக்கிறது. இதுகுறித்து இதுவரை கேள்விப்படவில்லை. எனினும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X