ஆபாச 'வீடியோ' ஏழு பேர் கைது

Added : நவ 17, 2021
Share
Advertisement
புதுடில்லி:குழந்தை ஆபாச 'வீடியோ'க்கள் வெளியிட்ட வழக்கில் தொடர்புடைய ஏழு பேரை, சி.பி.ஐ., கைது செய்துள்ளது.குழந்தை ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை, சமூக வலை தளங்களிலும் இதர இணைய தளங்களிலும் வெளியிடுவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சட்டவிரோத செயல்களை, சி.பி.ஐ., அமைப்பின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிறப்புக் குழு கண்காணித்து

புதுடில்லி:குழந்தை ஆபாச 'வீடியோ'க்கள் வெளியிட்ட வழக்கில் தொடர்புடைய ஏழு பேரை, சி.பி.ஐ., கைது செய்துள்ளது.

குழந்தை ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை, சமூக வலை தளங்களிலும் இதர இணைய தளங்களிலும் வெளியிடுவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சட்டவிரோத செயல்களை, சி.பி.ஐ., அமைப்பின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிறப்புக் குழு கண்காணித்து வருகிறது.

இந்நிலையில், நம் நாட்டில் குழந்தை ஆபாச வீடியோக்களை, 5,000க்கும் மேற்பட்டோர் பகிர்ந்து வருவதாக சமீபத்தில் தெரியவந்தது. இவர்கள், 50க்கும் மேற்பட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக, பாகிஸ்தான், கனடா, வங்கதேசம், நைஜீரியா, இந்தோனேஷியா, உள்ளிட்ட நாடுகளுக்கு, இந்த வீடியோக்களை பகிர்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இதில் தொடர்புடைய ஏழு பேரை சி.பி.ஐ., கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டு உள்ள நபர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாகவும், இந்த விசாரணை அடிப்படையில், மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X