அலட்சிய அதிகாரிகள் மீது சுப்ரீம் கோர்ட் சாட்டை! ஜடமாகி விட்டதாக கடும் கண்டனம்

Updated : நவ 19, 2021 | Added : நவ 17, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி : 'எந்த பிரச்னையிலும் நீதிமன்றங்களே முடிவு எடுக்கட்டும் என, அதிகாரிகளிடம் அலட்சியப் போக்கு ஏற்பட்டுவிட்டது. எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவர்கள் ஜடமாக செயல்பட பழகிக் கொண்டு விட்டனர்' என, உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.டில்லியில் காற்று மாசு மிகவும் அதிகரித்துள்ளது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த
அலட்சிய அதிகாரிகள் ,கோர்ட் சாட்டை! ஜடம், கண்டனம்

புதுடில்லி : 'எந்த பிரச்னையிலும் நீதிமன்றங்களே முடிவு எடுக்கட்டும் என, அதிகாரிகளிடம் அலட்சியப் போக்கு ஏற்பட்டுவிட்டது. எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவர்கள் ஜடமாக செயல்பட பழகிக் கொண்டு விட்டனர்' என, உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.டில்லியில் காற்று மாசு மிகவும் அதிகரித்துள்ளது.

மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் பற்றி உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. கடந்த ௧௩ம் தேதி நடந்த விசாரணையின் போது, 'டில்லியில் காற்று மாசு மோசமடைந்து வருகிறது. 'இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண, அவசரகால நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மத்திய அரசு மற்றும் டில்லி, பஞ்சாப், ஹரியானா அரசுகளை உச்ச நீதிமன்றம்அறிவுறுத்தியது.
நடவடிக்கைஇதையடுத்து, பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவித்த டில்லியை ஆளும், முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, அரசு தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றவும் அறிவுறுத்தியது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி ரமணா தலைமையில், நீதிபதிகள் சூர்யகாந்த், சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று நடந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, டில்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைள் அடங்கிய பட்டியலை தாக்கல் செய்தார்.

அதில் கூறப்பட்டிருந்ததாவது:டில்லியில், அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் லாரிகளை தவிர, மற்ற லாரிகள் நுழைய தடை விதிக்க வேண்டும். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். தேசிய தலைநகர் மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம், மற்ற ஊழியர்கள், வீட்டிலிருந்தே பணியாற்றலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
மனோபாவம்இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், 'டில்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த, மத்திய அரசு தெரிவித்துள்ள நடவடிக்கைகளை, டில்லி, பஞ்சாப், உத்தர பிரதேசம், ஹரியானா அரசுகள் மேற்கொள்ள வேண்டும்' என, உத்தரவிட்டனர். அடுத்து, தலைமை நீதிபதி ரமணா கூறியதாவது:நான், நீதிபதியாக பணியாற்றிய காலத்திலும், அட்வகேட் ஜெனரலாக பணியாற்றிய போதும், அரசு உயர் அதிகாரிகளிடம் ஒரு மெத்தன போக்கு ஏற்பட்டுள்ளதை கவனித்துஉள்ளேன். எந்த பிரச்னையிலும், நீதிமன்றங்களே முடிவு எடுக்கட்டும் என்ற அலட்சியத்துடன் செயல்படும் மனோபாவம், அவர்களிடம் அதிகரித்துவிட்டது. எதையும் தாமாக செயல்படுத்தாமல், ஜடமாக இருக்க அதிகாரிகள் பழகிக் கொண்டுவிட்டனர். அதிகாரிகளிடம் ஏற்பட்டுள்ள இந்த மனோபாவம் மாற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


துாங்க கூடாதுஇதற்கு பதில் அளித்து சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:நாட்டில், யாரும் பசியுடன் துாங்க கூடாது என, மன்னன் ஒருவர் உத்தரவிட்டார். உடனே காவலர்கள் துாங்கிக் கொண்டிருந்த குதிரைக்காரன் ஒருவனை எழுப்பி, 'பசியுடன் துாங்குகிறாயா' என, கேட்டனர்.
அதற்கு குதிரைக்காரன், 'ஆமாம்' என்றான். அடுத்து காவலர்கள், 'இனி நீ துாங்க கூடாது' என, உத்தரவிட்டனர். இந்தக் கதையை, யாரையும் புண்படுத்தும் நோக்கில் நான் கூறவில்லை. நிலைமைக்கு ஏற்ப அனைவரும் வேகமாக செயல்படுவதுடன், அறிவுபூர்வமாக செயல்பட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


'டிவி' விவாதங்களால் மாசுகாற்று மாசு தொடர்பான வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி ரமணா கூறியதாவது:காற்று மாசு பிரச்னையில், விவசாயிகளை தண்டிக்க நாங்கள் விரும்பவில்லை. 'டிவி' சேனல்களில் நடைபெறும் விவாதங்களே அதிக மாசுபாட்டை உருவாக்குகின்றன. டில்லியில் நட்சத்திர ஓட்டல்களில் அமர்ந்துக் கொண்டு, விவசாயிகள் கழிவுகளை எரிப்பதால் அதிக மாசு ஏற்படுவதாக கூறி, அவர்கள் விவாதிப்பது வேதனையானது. இவ்வாறு, அவர் கூறினார்.


வாகனங்களுக்கு தடைகாற்று மாசை குறைக்க டில்லியில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் கூறியதாவது:மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, டில்லியில் பள்ளி, கல்லுாரிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளுக்கு, வரும் ௨௧ வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை தவிர, வேறு வாகனங்கள் டில்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
தங்கள் வாகனங்களை பயன்படுத்துவதை விட, மெட்ரோ ரயில்கள், பஸ்களில் பயணிக்க, பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுஉள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-நவ-202120:33:43 IST Report Abuse
அப்புசாமி ...களுக்கு பதவி நீட்டிப்பு குடுக்குறாங்க யுவர் ஆனர். கீழே இருந்து வேலை செஞ்சுக்கிட்டே இருக்க அதிகாரிகள் இளிச்ச வாயர்களா? அவிங்களுக்கு ஒரு பதவி உயர்வும் கிடையாது. அதுவும் ஒரு முக்கிய காரணம்.
Rate this:
Cancel
R VENKATARAMANAN - Chennai,இந்தியா
18-நவ-202113:34:36 IST Report Abuse
R VENKATARAMANAN லஞ்சலாவண்யத்திற்கு மத்திய மாநில அரசுகள் எதுவும் விதிவிலக்கல்ல எல்லோருக்கும் தகுதிக்கு மீறின ஆசை. சரியான தேவையான கல்வித்தகுதி பலபேரிடம் இல்லை. ஆனால் உயர்பதவி வகிக்க ஆர்வம். தேவைகளை பூர்த்திசெய்துகொள்ள லஞ்சம் பெறுகின்றனர். சிலர் தன் காரியங்களை முடித்துக் கொள்ள தானாகவே லஞ்சம் கொடுத்து தன் தேவைகளை முடித்து கொள்கிரார்கள். சில அரசியல் வாதிகளை அதிகாரிகள் தன் தேவைக்காக லஞ்சம்பெற வழிவகுக்கிறார்கள். அரசியல் வாதிகளின் அசையும் அசையா சொத்துக்களை ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தவறாமல் கண்காணிக்கவேண்டும். மத்தியாசர்க்கார் இதற்கு ஒரு அமைப்பை ஏற்படுத்தவேண்டும். எந்த அசையும் அசையா சொத்து பரிவர்த்தனை பதிவு ஆனவுடன் அதன் விபரம் அந்த அமைப்புக்கு கிடைக்க வேண்டும். அந்த அமைப்பு விபரம் கிடைத்தவுடன் ஆய்வு செய்யவேண்டும். விற்றவன் வாங்கியவன் தகுதியை ஆராயவேண்டும். சந்தேகம் ஊர்ஜிதம் ஆனால் சொத்தை சமபந்தப்பட்ட சொத்தை அரசுடைமை ஆக்கவேண்டும். எல்லாவற்றிக்கும்மேலாக நன்கு படித்து மதிப்பு எண் பெற்றவர்களை பதவியில் அமர்த்தவேண்டும். சுதந்திரம் பெற்று இவ்வளவு வருடங்கள் ஆனபிறகும் பிறப்பு முதல் இறப்பு வரை சலுகை கொடுத்து நாட்டை குட்டிச்சுவர் ஆக்கக்கூடாது. முதலில் சலுகைகள் அனைத்தும் எடுக்க வேண்டும். படிப்பு தகுதிக்கு ஏற்ப வேலை என்று ஊர்ஜிதப்படுத்த வேண்டும். இல்லை என்றால் நாடும் உருப்படாது லஞ்சமும் ஒழியாது.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
18-நவ-202108:54:03 IST Report Abuse
RajanRajan 'எந்த பிரச்னையிலும் நீதிமன்றங்களே முடிவு எடுக்கட்டும் என, அதிகாரிகளிடம் அலட்சியப் போக்கு ஏற்பட்டுவிட்டது. எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவர்கள் ஜடமாக செயல்பட பழகிக் கொண்டு விட்டனர்' என, உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம். ஜுட்ஜ் சாமி நீங்க என்னவோ சாட்டை எடுத்து தான் அடிக்கிறீங்க. ஆனா அவனுங்க சுறுசுறுப்பு வர ஒரே யுக்தி பணக்கத்தையை எடுத்து காட்டினாள் போதுமே. உடனே டாஸ்மாக் வேகம் எடுத்துருவான் தமிழக அதிகார வர்கம். சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது... எனும் பாட சுவாரசியமா இருக்குதே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X