ஒன்றும் செய்யவில்லை!| Dinamalar

ஒன்றும் செய்யவில்லை!

Added : நவ 17, 2021
Share
ஒன்றும் செய்யவில்லை!கடந்த 70 ஆண்டுகளாக ஆட்சி புரிந்த காங்., கட்சி, மக்களுக்கு என்ன செய்தது? இலவசங்களை வழங்கி தேர்தலில் ஓட்டு பெறுவதை மட்டுமே இன்று வரை செய்து வருகிறது. மக்கள் சுயமாக அதிகாரம் பெறுவதற்கு, காங்., கட்சி எந்த உதவியும் செய்யவில்லை.நட்டாதேசிய தலைவர், பா.ஜ.,பிளவுபடுத்த முயற்சி!மதத்தின் அடிப்படையில் மக்களை பிளவுபடுத்த, காங்., முயற்சித்து வருகிறது. ஹிந்துத்துவாவை
ஒன்றும் செய்யவில்லை!

ஒன்றும் செய்யவில்லை!
கடந்த 70 ஆண்டுகளாக ஆட்சி புரிந்த காங்., கட்சி, மக்களுக்கு என்ன செய்தது? இலவசங்களை வழங்கி தேர்தலில் ஓட்டு பெறுவதை மட்டுமே இன்று வரை செய்து வருகிறது. மக்கள் சுயமாக அதிகாரம் பெறுவதற்கு, காங்., கட்சி எந்த உதவியும் செய்யவில்லை.
நட்டா
தேசிய தலைவர், பா.ஜ.,
பிளவுபடுத்த முயற்சி!
மதத்தின் அடிப்படையில் மக்களை பிளவுபடுத்த, காங்., முயற்சித்து வருகிறது. ஹிந்துத்துவாவை ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் ஒப்பிட்ட காங்., மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், அதற்கு ஒரு சிறந்த உதாரணம். பா.ஜ.,வினர் அவ்வாறு செய்ததில்லை.
புரந்தேஷ்வரி
பொதுச் செயலர், பா.ஜ.,
காந்தி ஆதரவாளரா?
பகத் சிங் மற்றும் நேதாஜியை, காந்தி ஆதரிக்கவில்லை. அனைத்து தலைவர்களையும் ஒரே நிலையில் வைத்து புகழ்வதை ஏற்க இயலாது. நாம் காந்தி ஆதரவாளரா, அல்லது நேதாஜி ஆதரவாளரா? என்பதை மக்கள் யோசித்து முடிவு செய்ய வேண்டும். இரண்டு பேரின் ஆதரவாளராகவும் இருக்க முடியாது.
கங்கனா ரணாவத்
பாலிவுட் நடிகை

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X