கடமைக்கு முக்கியத்துவம் அளியுங்கள் மக்கள் பிரதிநிதிகளுக்கு பிரதமர் அறிவுரை

Updated : நவ 19, 2021 | Added : நவ 17, 2021 | கருத்துகள் (4)
Advertisement
புதுடில்லி : ''எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களில் துவங்கி சாதாரண குடிமக்கள் வரை அனைவரும் தங்கள் கடமைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சட்டம் இயற்றும் மக்கள் பிரதிநிதிகளின் சபை நடவடிக்கை இந்திய மதிப்பீடுகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.அனைத்திந்திய சபாநாயகர்கள் 82வது மாநாடு ஹிமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் நடக்கிறது. நேற்று
கடமை,முக்கியத்துவம் , மக்கள் பிரதிநிதி, அறிவுரை

புதுடில்லி : ''எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களில் துவங்கி சாதாரண குடிமக்கள் வரை அனைவரும் தங்கள் கடமைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சட்டம் இயற்றும் மக்கள் பிரதிநிதிகளின் சபை நடவடிக்கை இந்திய மதிப்பீடுகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

அனைத்திந்திய சபாநாயகர்கள் 82வது மாநாடு ஹிமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் நடக்கிறது. நேற்று நடந்த மாநாடு துவக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானது. நம் நாடு சுதந்திரம் பெற்று நுாற்றாண்டை நெருங்கி கொண்டுள்ளது.இந்த நேரத்தில் பார்லி., மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் தங்கள் கடமைக்கும், நடத்தைக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். இது மக்கள் வாழ்வில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு குறித்து முரண்பாடான கருத்து எழாமல் விழிப்புடன் இருப்பது உறுப்பினர்களின் பொறுப்பு.

பார்லி., மற்றும் சட்ட சபைகளில் உறுப்பினர்களின் நடவடிக்கை இந்திய மதிப்பீடுகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும். சபையில் தனியாக நேரம் ஒதுக்கி மிக முக்கியமான, ஆரோக்கியமான விவாதங்களை மேற்கொள்ள வேண்டும்.அவை அரசியல் சார்பின்றி கண்ணியமான விவாதங்களாக இருக்க வேண்டும்.ஜனநாயகம் என்பது நம் நாட்டின் நடைமுறை மட்டுமல்ல; அது நம் இயல்பு.இவ்வாறு அவர் பேசினார்.


'சபை கண்ணியம் காக்கப்பட வேண்டும்'லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா பேசியதாவது:சபை கூடுவது குறைந்து வருவதும், சபையில் சட்டம் இயற்றும்போது விவாதங்கள் நடக்காமல் இருப்பதும் கவலை அளிக்கிறது.
இதை சரிசெய்ய, சபை நடவடிக்கையில் நாடு முழுதும் ஒரே மாதிரியான சட்ட திட்டங்கள், நடைமுறைகள் இயற்றப்பட வேண்டும். அதற்கான மாதிரி ஆவணங்களை தயாரிக்க வேண்டும்.
சபை நடவடிக்கைகளில் நாம் சந்திக்கும் சிக்கல்களை சீர்செய்ய அனைத்து கட்சிகளுடன் விவாதித்து தீர்வு காண வேண்டும். அப்போது தான் சட்டம் இயற்றும் அமைப்புகள் கவுரவத்துடனும், கண்ணியத்துடனும் செயல்பட முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.Gomathinayagam - chennai,இந்தியா
18-நவ-202114:33:11 IST Report Abuse
A.Gomathinayagam குற்ற பின்னணி உள்ளவர்கள் அதிக அளவில் எல்லா கட்சியை சேர்ந்தவர்களும் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்கள் அவர்கள் எதற்காக வந்தார்களோ நிச்சியம் அந்த கடமையை செய்வார்கள்
Rate this:
Cancel
Karunanidhi - Madurai,இந்தியா
18-நவ-202114:30:55 IST Report Abuse
Karunanidhi We beg Modi not do anything and keep flying and tour countries. Whatever he does is damaging the country. Demonitization & GST - demolished the economic growth, Covid handling - made poor people walk miles, NPR - Proved in Assam, where it is implemented by spending 1220 crs only 1010 people are suspected to be from Bangaladesh, Fuel and Gas Price hike - Not affordable by common man and his promise of 45 per liter of petrol is to cheat people, Handling China - Gave hectares of land to China, Pakistan handling - When MMS was there Pakistan was completely isolated from the world, except for China, now due to mishandling Pakistan is limping towards normalcy, J&K issue - Taken the state to pre 1995 era, the list is endless. For the betterment of the country, we request Mr. Modi take rest and don't do anything
Rate this:
Cancel
Chinnappa Pothiraj - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-நவ-202111:51:42 IST Report Abuse
Chinnappa Pothiraj நாடு வளர்ச்சியடையவும் முன்னேறவும் வாழ்த்துக்கள். எந்தப்பதவியில் இருந்தாலும், சாமானிய மக்களாகயிருந்தாலும் ,அரசுப்பணியில் இருந்தாலும், நேர்மைக்கு, நீதிக்கு, கடமைக்கு, நல்லொழுக்கத்திற்கு கட்டுப்படாமல் தவறுசெய்யும் மக்களை (பில்டர் காபிபோல் அல்லாது இன்ஸ்டண்ட்காபிபோல்) காலம் தாழ்த்தாது தண்டியுங்கள். நாடு அதிவேகமாக முன்னேற்றமுடன் பயணிக்கும். நாட்டில் கொள்ளையடிக்கும் கும்பளும், கொலைகாரக்கும்பளும் குறைந்தபாடில்லை.அந்தளவிறகு நம் சட்டங்களின் நடைமுறையும், காவல்துறையும், நீதிமன்றங்களும். தனிமனித ஒழுக்கம் இவற்றை சரிசெய்தாலே மனதில் நல்ல எண்ணங்கள் வந்துவிடும். உடல் நோகாமல் கொள்ளை அடித்த பணத்தை வைத்து நகரை தன்கைவசம் வைத்துக்கொள்ள அச்சுறுத்தல் முறையில் வலம் வருவது. காவல்துறையை மிஞ்சும் அளவிற்கு தன் ஆதிக்கத்தை அதிகார துஷ்பிரயோகம். இன்று நடக்கும் அனைத்தும் விபத்துக்கள் அல்ல. திட்டமிட்ட கொலைகள்தான். பரந்த இணையவழியின் மூலமும் இனத்தவரின் மூலமும் அடாவடிசெயல்கள். உளவுத்துறையால்கூட கண்காணிக்கமுடியாது அத்தனை புத்திசாலித்தனமான செயல்கள். நாடு நலம்பெற அதிதீவிரத்துடண் குற்றமில்லா நாடாக மாற்றுங்கள். தனிமனிதனுக்கு நீதி கிடைக்கவில்லை அதனால்தான் மீண்டும் மீண்டும் நக்சல்களும் நாட்டிற்கு எதிரான தீவிரவாதிகளும் செயல்களும் நடக்கிறதோ என்ற எண்ணத்தோன்றுகிறது.தேசிய தலைவர்கள் காட்டிய வழியில்செல்லாமல் மக்களுக்கு அராஜகம் செய்கிறார்கள். வந்தேமாதரம் ஜெய்ஹிந்த்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X