கடமைக்கு முக்கியத்துவம் அளியுங்கள் மக்கள் பிரதிநிதிகளுக்கு பிரதமர் அறிவுரை

Added : நவ 17, 2021
Share
Advertisement
புதுடில்லி:''எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களில் துவங்கி சாதாரண குடிமக்கள் வரை அனைவரும் தங்கள் கடமைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சட்டம் இயற்றும் மக்கள் பிரதிநிதிகளின் சபை நடவடிக்கை இந்திய மதிப்பீடுகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.அனைத்திந்திய சபாநாயகர்கள் 82வது மாநாடு ஹிமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் நடக்கிறது. நேற்று நடந்த

புதுடில்லி:''எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களில் துவங்கி சாதாரண குடிமக்கள் வரை அனைவரும் தங்கள் கடமைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சட்டம் இயற்றும் மக்கள் பிரதிநிதிகளின் சபை நடவடிக்கை இந்திய மதிப்பீடுகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

அனைத்திந்திய சபாநாயகர்கள் 82வது மாநாடு ஹிமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் நடக்கிறது. நேற்று நடந்த மாநாடு துவக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானது. நம் நாடு சுதந்திரம் பெற்று நுாற்றாண்டை நெருங்கி கொண்டுள்ளது.

இந்த நேரத்தில் பார்லி., மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் தங்கள் கடமைக்கும், நடத்தைக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். இது மக்கள் வாழ்வில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு குறித்து முரண்பாடான கருத்து எழாமல் விழிப்புடன் இருப்பது உறுப்பினர்களின் பொறுப்பு.பார்லி., மற்றும் சட்ட சபைகளில் உறுப்பினர்களின் நடவடிக்கை இந்திய மதிப்பீடுகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும்.

சபையில் தனியாக நேரம் ஒதுக்கி மிக முக்கியமான, ஆரோக்கியமான விவாதங்களை மேற்கொள்ள வேண்டும்.அவை அரசியல் சார்பின்றி கண்ணியமான விவாதங்களாக இருக்க வேண்டும்.ஜனநாயகம் என்பது நம் நாட்டின் நடைமுறை மட்டுமல்ல; அது நம் இயல்பு.இவ்வாறு அவர் பேசினார்.


'சபை கண்ணியம் காக்கப்பட வேண்டும்'



லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா பேசியதாவது:சபை கூடுவது குறைந்து வருவதும், சபையில் சட்டம் இயற்றும்போது விவாதங்கள் நடக்காமல் இருப்பதும் கவலை அளிக்கிறது.இதை சரிசெய்ய, சபை நடவடிக்கையில் நாடு முழுதும் ஒரே மாதிரியான சட்ட திட்டங்கள், நடைமுறைகள் இயற்றப்பட வேண்டும்.

அதற்கான மாதிரி ஆவணங்களை தயாரிக்க வேண்டும்.சபை நடவடிக்கைகளில் நாம் சந்திக்கும் சிக்கல்களை சீர்செய்ய அனைத்து கட்சிகளுடன் விவாதித்து தீர்வு காண வேண்டும். அப்போது தான் சட்டம் இயற்றும் அமைப்புகள் கவுரவத்துடனும், கண்ணியத்துடனும் செயல்பட முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X