ஆவணம் புதுப்பிக்காத வாகனம் மீது நடவடிக்கை| Dinamalar

தமிழ்நாடு

'ஆவணம் புதுப்பிக்காத வாகனம் மீது நடவடிக்கை'

Added : நவ 17, 2021
Share
திருப்பூர்: ஆவண புதுப்பிப்புக்கான காலக்கெடு முடிந்த பின்பும், புதுப்பிப்புக்கு வராமல், தொடர்ந்து பொது சாலையில் இயங்கி வரும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.கொரோனா தொற்று பரவல் காரணமாக, வாகன ஆவண புதுப்பிப்பு 2020, மார்ச், 31ல் நிறுத்தப்பட்டது. அக்., 31 வரை ஏழுமுறை கால அவகாசம் நீட்டித்து உத்தரவு வெளியிடப்பட்டது.'ஆவணங்களை புதுப்பிக்காதவர் தவறாமல்

திருப்பூர்: ஆவண புதுப்பிப்புக்கான காலக்கெடு முடிந்த பின்பும், புதுப்பிப்புக்கு வராமல், தொடர்ந்து பொது சாலையில் இயங்கி வரும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.கொரோனா தொற்று பரவல் காரணமாக, வாகன ஆவண புதுப்பிப்பு 2020, மார்ச், 31ல் நிறுத்தப்பட்டது. அக்., 31 வரை ஏழுமுறை கால அவகாசம் நீட்டித்து உத்தரவு வெளியிடப்பட்டது.'ஆவணங்களை புதுப்பிக்காதவர் தவறாமல் புதுப்பிக்க வட்டார போக்குவரத்து துறை அலுவலகம் வர வேண்டும் அல்லது ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இனி, காலஅவகாசம் நீட்டிக்கப்படாது' என, அறிவுறுத்தப்பட்டது.இந்நிலையில், அரசின் கூடுதல் போக்குவரத்து ஆணையர் மணக்குமார், சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில், 'கால அவகாசம் முடிவுற்ற நிலையிலும், ஆவணங்களை புதுப்பிக்காமல், இயக்கப்படுவதாக தெரிய வருகிறது. அவ்வாறு இயக்கப்படும் நிலையில் விபத்து ஏற்பட்டால், காப்பீடு வழங்க இயலாது. காப்புச்சான்று, புகைச்சான்று மற்றும் இதர ஆவணங்கள் புதுப்பிக்காமல் இயங்கும் வாகனங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X